இந்த உலகை ‘கொரோனா’ என்னும் கொடிதான நோய் கவ்விப் பிடித்துக் கொண்டிருந்த காலத்தில் உலகத் தமிழ்ச் சமூகமானது. அந்த அதிர்ச்சியிலம் ஒய்யாராமாய் எழுந்து நிற்கத் துணிந்தது.
உலகெங்கும் இயங்கிவரும் பல்வேறு துறை சார்ந்த அமைப்புக்களும் கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் இணையவழியாக பல அறிவு சார்ந்த விடயங்களை அறிமுகப்படுத்தின. கலை இலக்கியம் ஆக்க இலக்கியம் மற்றும் தமிழர்களின் மரபுக் கலைகள் என அனைத்தையும் அணைத்த வண்ணம் உலகத் தமிழ் இனம் உயரத்தை அடைந்து விட காரியங்களிலி இறங்கியது.
இந்த வேளையின் போது தான் மலேசியாவிலிருந்து சமூக ஆர்வலரும் பாடகருமான ரவாங் ராஜா கனடா உதயன் ஆசிரிய பீடத்தை நோக்கி அழைப்பொன்றை விடுத்தார்.
அந்த உரையாடலில் அவரது சமூக அக்கறையும் வளர்ந்த வரும் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் மீது கொண்ட அக்கறையும் தென்பட்டது.
ஆமாம்! மலேசியாவில் உள்ள ஒதுக்குப் புறமாக இயங்கிவரும் தமிழ்ப் பாடசாலைகளில் கல்வி பயிலும் ஆரம்ப வகுப்புகளில் உள்ள மாணவ மாணவிகளின் நாவன்மைத் திறனை உலகறியச் செய்ய வேண்டும் என்ற தனது எண்ணத்தை கனடா உதயன் ஆசிரிய பீடத்தின் உறுப்பினர்களிடம் சமர்ப்பித்தார்.
அந்த மாதத்தின் கடைசி வாரத்தில் இந்த நிகழ்ச்சியை அவர் கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்தின் ஆதரவோடு ஆரம்பித்தார் ரவாங் ராஜா அவர்கள்.
இந்த அற்புதமான முயற்சிக்கு மலேசியாவில் உள்ள பெற்றோர் சமூகமும் ஆசிரிய சமூகமும் ரவாங் ராஜா அவர்களுக்கு முழுமையான ஆதரவை வழங்கி நின்றன அந்த மாதத்திலேயே முதல்வாது நிகழ்ச்சி கடைசி வாரத்தில் ஆரம்பமானது.
மலேசியாவின் பல மாநிலங்களிலிருந்தும் மாணவ மாணவிகள் சேர்த்துக் கொள்ளப்பட்டார்கள். அனைத்தும் நன்றாகவே நடந்தன. ஆரம்பமே நல்ல அத்திவாரத்தை உறுதியாக அமைத்தது.
தற்போது. ஓராண்டை எட்டிப் பிடிக்கும் கனடா உதயன்-மலேசிய தமிழ்க் கல்விச் சமூகம் இணைந்து நடத்தும் இந்த ‘மலேசிய தமிழ் மாணவர்களின் நாவன்மையை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி அடுத்த மே மாதத்தில் 29ம் திகதி இணையவழி ஊடாக நடைபெறவுள்ளது. ஓராண்டை பூர்த்தி செய்யும் இந்த நிகழ்வில் சிறப்பான பல அம்சங்கள் இடம்பெறவுள்ளன.
இங்கே காணப்படும் படங்கள் கடந்த 24ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘அரங்கம்- 11’ இல் பங்கு பற்றிய அனைத்து மாணவ மாணவிகள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் என அனைவரையும் உங்கள் முன் கொண்டு வருகின்றது.
நன்றியுடன்- கனடா உதயன் ஆசிரிய பீடம்