மன்னார் நிருபர்
26-04-2022
மன்னார் இலங்கை வங்கிக்கு அருகாமையில் பெண் ஒருவரின் சங்கிலி இனம் தெரியாத நபர்களால் அறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று மதியம் இடம் பெற்றுள்ளது.
உப்புக்குளம் பகுதியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்த பெண் ஒருவரை பின் தொடர்ந்த இருவர் திடீரென சங்கிலியை அறுத்த நிலையில் சந்தேக நபர்கள் தப்பி சென்றுள்ளார்
இந்த நிலையில் சம்மந்தப்பட்ட பெண் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொண்டுள்ள நிலையில் மன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
அண்மைக் காலமாக மன்னார் நகர் பகுதிகளில் வீடுகள் உடைக்கப்படும் சம்பவங்களும் திருட்டு சம்பவங்களும் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடதக்கது