வலிமையாக, தயாராக, உங்களின் பணியில்: NDP தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ள தலைவி ஹோர்வத்
சுகாதார சேவையை சரிசெய்தல், விரிவுபடுத்துதல், வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் போன்றவற்றில் NDP திட்டம் கவனம் செலுத்துகிறது
– NDP ஒரு விரிவான தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது, இது மக்களுக்கு மிகவும் முக்கியமான விடயங்களைச் சரிசெய்வதற்கான திட்டத்தை வகுத்துள்ளது – OHIP-ஐ விரிவுபடுத்துவது உட்பட, இதன் மூலம் மக்களுக்கு சொந்த செலவில்லாமல் OHIP அட்டை மூலம் மனநலப் பாதுகாப்பு, பல் பராமரிப்பு, மருந்துச் சீட்டுகள் ஆகியவற்றை பெறலாம்.
இந்த அறிக்கையில் ஒன்றாரியோ என்டிபி கட்சியின் தலைவி அன்றியா ஹார்வத் மேலும் தெரிவித்துள்ளதாவது:_
“கடந்த சில வருடங்கள் கடினமாக இருந்தன. நமது சுகாதாரத்துறை கட்டமைப்பு சீர்குலைந்துள்ளதால் மக்கள் வேதனையுடன் காத்திருக்கின்றனர். மேலும் மக்கள் முன்னெப்போதையும் விட கடினமாக உழைக்கிறார்கள், அதே நேரத்தில் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவும் வீட்டு விலைகளும் அவர்கள் முன்னேறுவதை சாத்தியமற்றதாக்குகின்றன, ”என ஹோர்வத் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால் இது இவ்வாறு இருந்திருக்க வேண்டியதில்லை. ஒன்டாரியோ உலகில் வாழ்வதற்கு மிகச்சிறந்த இடமாகும், நாம் ஒன்றாக இணைந்து சீர்குலைந்து போன, மக்களுக்கு அன்றாட வாழ்வில் தேவைப்படும் விடயங்களை சரிசெய்ய ஆரம்பிக்கலாம்.”
அனைவருக்குமான மனநலப் பாதுகாப்பு, மற்றும் கனடாவின் முதல் உண்மையான பொது மருந்தகத் திட்டம் ஆகியவற்றுக்கு NDP தேர்தல் அறிக்கை உறுதியளிக்கிறது. இது உள்வரும் கூட்டாட்சி பல் பராமரிப்பு திட்டத்தையும் மேம்படுத்துகிறது. இத்தகைய திட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் குடும்பங்களுக்கு ஆயிரக்கணக்கான டொலர்களை சேமிக்கும், மற்றும் ஒன்டாரியோவின் அவசர சிகிச்சை அறைகளின் நெருக்கடியை குறைக்கும்.
இது சிறந்த ஊதியம் மற்றும் பணி நிலைமைகளுடன் சுகாதாரப் பணியாளர்களை இணைக்கவும், பணியில் தக்கவைக்கவும் மீள அழைத்துக்கொள்ளவும் உதவும். NDP 10,000 தனிப்பட்ட ஆதரவு பணியாளர்கள், 30,000 செவிலியர்கள் அடங்கலாக இன்னும் பலரை பணியில் அமர்த்தும். மேலும் 20,000 ஆசிரியர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களை பணியில் அமர்த்தி வகுப்பு அளவைக் குறைப்பதற்கும், ஒவ்வொரு குழந்தைக்கும் அதிக ஆதரவையும் வாய்ப்பையும் வழங்குவதற்கும் ஹோர்வத் இணங்கியுள்ளார்.
ஒன்டாரியர்களின் அன்றாட வாழ்க்கைச் செலவை குறைப்பதாக NDP தேர்தல் அறிக்கை உறுதியளிக்கிறது. குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நான்கு ஆண்டுகளுக்கு வருமான வரி முடக்கத்தை இது உறுதி செய்கிறது. இது குடியிருப்பாளர்களுக்கு வாடகைக் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவரும், வீட்டு ஊக வணிகர்களை ஒடுக்கும், விலைவாசி உயர்வைத் தடுக்க எரிவாயு விலைகளை ஒழுங்குபடுத்தும், சுகாதாரப் பாதுகாப்பில் பயனர் கட்டணத்தைத் தடை செய்யும், நீர் கட்டணங்களின் விலையைச் சமாளிக்கும். அதற்கு பதிலாக, வரி சட்ட ஓட்டைகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பல மில்லியனர்கள் மற்றும் பாரிய நிறுவனங்கள் தங்கள் நியாயமான பங்கைச் செலுத்துவார்கள்.
“டக் ஃபோர்டின் செலவு வெட்டுக்கள் விடயங்களை சரிசெய்யாது. அவர் தனது நண்பர்களுக்கு அவர்கள் விரும்பும் எதையும் கொடுத்துக் கொண்டே இருப்பார், அது ஏனையவர்கள் மீது எத்தகைய தாக்கத்தை செலுத்தும் என்பது பற்றி கருத்திற் கொள்ள மாட்டார். தாங்கள் சீர்குலைய உதவியவற்றை ஸ்டீவன் டெல் டுகாவின் லிபரல்கள் சரி செய்வார்கள் என மக்கள் நம்பவில்லை. அவர்களுக்கு அவற்றை சரிசெய்ய 15 வருடங்கள் வாய்ப்புக் கிடைத்திருந்த போதும் செய்யாதிருந்தனர். அவர்கள் சுகாதார சேவையில் வெட்டுக்களை செய்து 1,600 செவிலியர்களை பணி நீக்கம் செய்தனர். Hydro One திட்டத்தை விற்றனர். வாழ்க்கைச் செலவை அதிகரிக்கச் செய்தனர். அவர்களின் செயற்பாடுகளுக்கான பலனை மக்கள் எதிர்கொண்டுள்ளார்கள்,” என ஹோர்வத் குறிப்பிட்டுள்ளார்.
“ஆனால் நாங்கள் அவற்றை மாற்றியமைக்க முடியும். இந்த அறிக்கை, அதை உருவாக்கிய சமூகம் ஆகியவை குறித்து நான் பெருமைப்படுகிறேன். யதார்த்தமற்ற திட்டங்களுக்கு நாங்கள் உறுதியளிக்கவில்லை. நாங்கள் உங்களுக்காக பணியாற்றுவதாகவே உறுதியளிக்கிறோம். நாங்கள் ஒன்று சேர்ந்தால், டக் ஃபோர்டை தோற்கடித்து, குடும்பங்களின் அன்றாட வாழ்வை உறுதியான நிலைக்கு கொண்டு வர முடியும். இது நடைமுறைச் சாத்தியமான, செய்யக்கூடிய திட்டம் என்பதால், நம்பிக்கை தென்படுகிறது.”
சிறப்பம்சங்கள்:
- சுகாதார சேவையை சரி செய்தலும் விரிவு படுத்துதலும்
- அனைவருக்குமான, பொது நிதியுதவி மனநலப் பாதுகாப்பு. சிகிச்சை சேவைகளை OHIP-க்குள் கொண்டு வருவதன் மூலம் NDP மாகாணம் முழுவதும் ஆலோசனை மற்றும் சிகிச்சை சேவைகளுக்கான அணுகலை விரிவுபடுத்தும்.
- பொது மருந்தகம். ஒன்டாரியர்களுக்கான அனைத்தும் உட்பட மருந்தகத்திற்கான பணியை NDP உடனடியாக ஆரம்பிக்கும்.
- சுகாதாரப் பணியாளர்களை இணைத்தல், தக்க வைத்தல், மீள அழைத்தல், ஆதரவளித்தல். சுகாதாரப் பணியாளர்களை மதித்து, அவர்களின் ஊதியத்தையும் பணி நிலைமைகளையும் மேம்படுத்தல் உள்ளடங்கலாக விரிவான உத்தியுடன்:
- 10,000 தனிப்பட்ட சுகாதார உதவிகளை வழங்கும் தொழிலாளர்கள் நியமித்தல்
- 30,000 செவிலியர்களை நியமித்தல்
- சர்வதேச பயிற்சி பெற்ற 15,000 செவிலியர்களின் நற்சான்றிதழ்களை விரைவாக அங்கீகரித்தல்
- அனுபவம் உள்ள மற்றும் சமீபத்தில் ஓய்வு பெற்ற செவிலியர்களுக்கு அவர்கள் தொடர்ந்து வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வை செய்யும் வகையில் பணியாற்ற கூடிய புதிய வேலைகளை உருவாக்குதல்
- குறிப்பாக வடக்கு ஒன்டாரியோவிற்கு 300 மருத்துவர்களையும் 100 நிபுணர்களையும் நியமித்தல்
குறைவான விலையில் வீடுகள், வாழ்க்கைச் செலவுகள்
- நடுத்தர வருமானங்களுக்கு வரி முடக்கம். NDP குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நான்கு வருட வருமான வரி முடக்கத்தை வழங்குவதாக உறுதியளிக்கிறது.
- கடைசி குடியிருப்பாளர் செலுத்திய வாடகையை செலுத்தவும். ஒரு NDP அரசாங்கம் அனைத்து அடுக்குமாடி குடியிருப்புகளுக்கும் உண்மையான வாடகைக் கட்டுப்பாட்டை மீண்டும் கொண்டுவரும், வாடகையை உயர்த்தி குடியிருப்பாளர்களை வெளியேற்றும் நில உரிமையாளர்களுக்களின் நிதி ஊக்கத்தை நீக்கும். காலியிடக் கட்டுப்பாட்டை நீக்குவதன் மூலம் கடைசி குடியிருப்பாளர் செலுத்தியதை நீங்கள் செலுத்துவதையும் நாங்கள் உறுதி செய்வோம்.
- ஊகங்களை முறியடித்தல். வசிக்காத வீடுகளை வைத்திருக்கும் ஊக வணிகர்கள் மீது வருடாந்த ஊகங்கள் மற்றும் காலியிட வரியை ஹோர்வத் அறிமுகப்படுத்துவார். இந்த விகிதம் மதிப்பிடப்பட்ட பெறுமதியில் இரண்டு சதவீதமாக இருக்கும், மேலும் இரண்டு ஆண்டுகளில் செயற்படுத்தப்படும். பணக்கார முதலீட்டாளர்களை வெளியேற்ற அனுமதிக்கும் சட்ட ஓட்டைகளையும் மூடுவோம்.
- எரிபொருள் நிலையங்களில் ஏற்படும் விலை அதிகரிப்பினை நிறுத்த, எரிபொருள் ஒழுங்குபடுத்தலை நடைமுறைப்படுத்தல். பெரிய எண்ணெய் நிறுவனங்கள் ஒன்டாரியர்களின் பணத்தை அபகரிப்பதைத் தடுக்க, எரிபொருளின் சில்லறை விலை மற்றும் மொத்த விற்பனைக் குறிப்பை ஒழுங்குபடுத்த ஒன்டாரியோ எரிசக்தி வாரியத்தை NDP வழிநடத்தும்.
- பயனர் கட்டணத்தை முடிவுறுத்தல். சுகாதாரப் பாதுகாப்பு அமைப்பின் ஒவ்வொரு பகுதியிலும் நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மீதான நியாயமற்ற பயனர் கட்டணங்களை அகற்ற சுகாதாரத் துறை பங்காளிகளுடன் NDP இணைந்து செயற்படும்.
- நீர் கட்டணங்களை சமாளித்தல். NDP நீர் கொள்திறனை விரிவுபடுத்தும், காற்று மற்றும் சூரிய சக்தி உட்பட மலிவு விலையில் புதுப்பிக்கத்தக்கவைகளை அதிகரிக்கும் – பெரிய அளவிலான மின் சேமிப்பகத்தை மேம்படுத்தும், செலவு குறைந்த மின்சார இறக்குமதியை செயல்படுத்த கியூபெக் மற்றும் மனிடோபாவுடன் பெரிய மின் (grid) இணைப்புகளை உருவாக்கும். நாங்கள் தனியார் மயமாக்கல் மற்றும் விலையுயர்ந்த தனியார் மின் ஒப்பந்தங்களை இரத்து செய்து, பொது உரிமையை மீட்டெடுப்பதற்கும், நம்பகத்தன்மையைப் பேணுவதற்கும், மறுபடியும் நீர் கட்டணங்களை குறைந்த விலைக்கு கொண்டு செல்வதற்கும் சிறந்த வழிகளைக் காண்போம்.