கனடா வாழ் தமிழ் எழுத்தாளர் அருண் செல்லப்பா அவர்கள் எழுதிய மூன்று நாவல்களின் வெளியீட்டு நிகழ்வும், ‘அம்மாவும் நானும்’ நினைவேந்தல் நிகழ்வும் அண்மையில் யாழ்.அச்சுவேலியில் இடம்பெற்றதன.
இந்த வெளியீட்டு நிகழ்வில் நினைத்தாலே இனிக்கும், அவளுக்கு என்று ஒரு மனம், சொல்லத்தான் நினைக்கிறேன் ஆகிய மூன்று நாவல்கள் வெளியிட்டு வைக்கப்பெற்றமையும் அங்கு அழைக்கப்பெற்ற நூற்றுக்கணக்கானவர்கள் பார்வையாளர்களாக கலந்து கொண்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது..
நூல்களை அம்பாறை மாவட்ட இளைப்பாறிய மேலதிக அரசாங்க அதிபர் இராமகிருஷ்ணன் செல்லத்துரை வெளியிட்டு வைக்க. இலங்கை இந்துக் குருமார் அமைப்பின் தலைவர் கலாநிதி சிவஸ்ரீ. கு.வை.க.வைத்தீஸ்வரக் குருக்கள் கலந்து கொண்டு ஆசியுரை ஆற்றியதுடன் நூல் மதிப்பீட்டுரைகளை கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலையின் பிரதி முதல்வர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன், கவிதாயினி உடுவிலூர் கலா, ஆசிரியை மதியழகன் சந்திரகாந்தன் ஆகியோர் நிகழ்த்தினர். கனடாவிலிருந்து சென்று தனது சொந்த ஊரில் இவ்வாறான ஒரு படைப்பிலக்கிய விழாவை நடத்தியமைக்காக கனடா உதயன் நிறுவனம் அவருக்கும் விழாவில் கலந்து சிறப்பித்த அனைவருக்கும் பாராட்டுக்களைத் தெரிவிக்கின்றது.
நூல்களை வெளியீ செய்த, அருண் செல்லப்பா அவர்கள் கனடாவிற்கு குடியேறுவதற்கு முன்பாக இலங்கை சுங்கத் திணைக்களத்தில் உத்தியோகத்தராக பணியாற்றியவர்க என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.