(மன்னார் நிருபர்)
28-04-2022
நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்கும் விதமாக மன்னாரில் இன்று வியாழக்கிழமை (28)அரச வங்கிகள் தபாலகம் உட்பட பல அலுவலகங்கள் மூடப்பட்டு தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்பபட்டது.
பாடசாலைகள் பெரும்பாலனவை நடைபெறவில்லை என்பதுடன் சில பாடசாலைகளுக்கு மாணவர்களின் வரவும் குறைந்து காணப்பட்டதையும் அவதானிக்க கூடியதாக காணப்பட்டது.
அதே நேரம் பேரூந்து சேவைகள் வழமை போல் இடம் பெற்றுவருகின்ற அதே நேரம் வர்தக நிலையங்களும் வழமைபோல் இயங்கி வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக அரச வங்கிகள் ஊடாகவும் தபால் அலுவலகங்கள் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் சேவைகள் இடை நிறுத்தப்பட்டமையினால் மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்