நேற்றைய ஒன்றாரியோ மாகாண வரவு செலவுத் திட்ட உரையில் முதியோர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கும் அறிவிப்புக்களை விடுத்த நிதி அமைச்சர்
நேற்று வியாழக்கிழமை கனடாவின் ஒன்றாரியோ மாகாண வரவு செலவுத் திட்ட உரையை மாகாணத்தின் நிதி அமைச்சர் பீற்றர் பெத்தலன்பவி ஆற்றிய போது மாகாணத்தில் உள்ள முதியோர்களுக்கு மேலும் சலுகைகளை வழங்கும் அறிவிப்புக்களையும் அறிவித்தார்.
இந்த அறிவிப்பின் பிரகாரம். நிதி அமைச்சர். அவர்கள் மாகாணத்தில் வாழும் அதிகமான முதியவர்களை வீட்டில் அதிக நேரம் தங்க வைத்திருக்கவும், அதன் மூலம். மாகாணத்தின் வைத்தியசாலைகள் மற்றும் முதியோர் இல்லங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சுமைகளை எளிதாக்கவும், வரவு செலவுத் திட்டம் வழி செய்யும் என்றார்.
அவர் குயின்பார்க் என்னும் மாகாணப் பாராளுமன்றத்தில் தொடர்ந்து வரவு செலவுத் திட்ட உரையை ஆற்றுகையில். மாகாணத்தின் முதல்வர் அவர்கள் தலைமையில் ஆராயப்பெற்று வியாழக்கிழமையன்று சமர்ப்பிக்கப்படும் இந்த திட்டத்தை தேர்தலுக்கு முன்னைய வரவு செலவுத் திட்டமாகப் பார்க்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.
மாகாணத்தின் தேர்தலுக்கு முந்தைய வரவு செலவுத்திட்டத்தில் , மூன்று ஆண்டுகளில் வீட்டுப் பராமரிப்புச் செலவை $1 பில்லியனாக உயர்த்துவதாகவும், குறைந்த வருமானம் கொண்ட மூத்தவர்களுக்கு புதிய வரிச் சலுகை வழங்குவதையும் உறுதிப்படுத்துகிறது என்றும் தெரிவித்தார்.
இந்த சலுகைத் திட்டத்தின் பிரகாரம். ஓன்றாரியோவில். 70 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய முதியோர்களுக்கான “முதியோர்கள் வீட்டில் கவனிப்பு” வரிச்சலுகை வழங்கப்பெறும் என்றும் மேலும் அவர்களின் பணத்தில் 25 சதவீதத்தை அதிகபட்சமாக $6,000 வரை திரும்பப் பெற அனுமதிக்கும், என்றும் வரி செலுத்தும் அவசியம் ஒன்றாரியோவின் முதியோர்களுக்கு இருக்காது என்றும் தெரிவித்தார்.
இந்தத் திட்டத்தில் அடங்குபவர்களாக கருதப்படுகின்றவர்களான தகுதியுடைய குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் உடைய முதியவர்கள் தனியார் பராமரிப்பாளர்கள், பாதுகாப்பு சீரமைப்புகள், சக்கர நாற்காலிகள் மற்றும் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள், வாக்கர்ஸ், மற்றும் , டயப்பர்கள், போன்ற முதியோர்களுக்கான பொருட்கள் மலிவான விலைகளுக்கு பெறும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பெறும் என்றும் இதன் மூலம் முதியோர்கள் ஏனைய அவசியமான பொருட்கள் உட்பட, மற்ற செலவுகளுக்குப் பணம் போதிய அளவிற்கு வைத்திருப்பதற்கும் இந்த திட்டம் வழி செய்கின்றது என்றும் தெரிவித்தார்
நேற்று வியாழன் அன்று நிதியமைச்சர் பீட்டர் பெத்லென்ஃபால்வி தனது வரவு செலவுத் திட்ட உரையில், “நீண்ட கால பராமரிப்பு நிலையங்களில் உள்ள படுக்கைகளும் வசதிகளும் மட்டுமே எமது மாகாணத்தில் உள்ள அன்பான மூத்தவர்களுக்கு கவனிப்பு தேவைப்படும் ஒரே வசதியாக இருக்கக்கூடாது” என்றும் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அனைத்தையும் பெற்றுக்கொள்ள வசதிகள் செய்யப்பெறும் என்றும் கூறினார்.
The Progressive Conservative government has budgeted $110 million for the income tax credit it estimates will help about 200,000 seniors with family net incomes below $65,000.
இவ்வாறு பார்க்கையில் ஒன்றாரியோவின் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் அரசானது, இவ்வருடத்தின் வரவு செலவுத்திட்ட அறிவிப்பின் பிரகாரம் மாகாணத்தில் உள்ள சுமார் இரண்டு இலட்சம் முதியவர்களுக்கு வரிச் சலுகை வழங்கும் வகையில் சுமார் 110 மில்லியன் டாலர்களை ஒதுக்கியுள்ளது என்றும் அறியப்படுகின்றது