ஒன்றாரியோ மாகாண அரசு ஸ்காபுறோவில் புதிய பாடசாலைக் கட்டங்களை நிர்மாணிக்கின்றது
கனடா ஸ்காபுறோ நகரில் இரண்டு பாடசாலைகளில் மேலதிக கட்டடங்களை நிர்மாணிக்கும் வகையில் அறிவிப்பை சில நாட்களுக்கு முன்னர் ஒன்றாரியோ மாகாணத்தின் கல்வி அமைச்சர் ஸ்டிபன் லெச்சே அவர்கள் விடுத்துள்ளார்.
இந்த அறிவிப்பை விடுக்கும் நிகழ்வில் மாகாண அரசின் உறுப்பினர்கள் சிலரும் கலந்து சிறப்பித்தார்கள்.
ஸ்காபுறோவில் அமைந்துள்ள எலிசபெத் சிம்கோ ஆரம்பப் பாடசாலைக்கு நிரந்தரமான கட்டடமொன்றை மேலதிகமாக கட்டுவதற்கும், போப்லர் ரோடு கனிஸ்ட பாடசாலைக்கு மற்றுமொரு கட்டடத்தையும் கட்டுவதற்கான அறிவிப்புக்களை அன்றைய தினம் கல்வி அமைச்சர் விடுத்தார்
ரொறன்ரொ மாநகரில் உள்ள உழைக்கும் குடும்பங்களுக்கு உதவும் வகையில், ரொறன்ரோ மாவட்ட கல்விச் சபையும் ஒன்ராறியோ அரசாங்கமும் இணைந்து கிட்டத்தட்ட $16 மில்லியன் முதலீடு செய்கிறனு. ஒன்ராறியோ இளைஞர்களுக்கான அதிநவீன தொழில் நுட்ப வசதிகளைக் கொண்ட பாடசாலைகளை உருவாக்குவதற்காக மாகாணத்தின் முதல்வர் டக் போர்ட் அவர்களின் தலைமையிலானஅரசாங்கத்தின் உறுதியான கல்விக் கொள்கையின் ஒரு பகுதியாக 387 மாணவர்கள் மற்றும் 88 உடற்பாதிப்புள்ள குழந்தை பராமரிப்பு இடங்களை உருவாக்க கல்வி அமைச்சர் ஸ்டீபன் லெட்சே அவர்களால் விடுக்கப்பெற்ற அறிவிப்புக்கள் உதவும் என கல்விச் சபையின் அதிகாரி ஒருவர் கனடா உதயன் பத்திரிகையின் ஆசிரிய பீடத்திற்கு தெரிவித்தார்.
சமீபத்தில் அமைச்சர் லெட்சே அவர்களால் அறிவிக்கப்பட்ட புதிய பாடசாலைகள் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு நிலையங்களை மேலும் வலுப்படுத்துவதற்காக கிட்டத்தட்ட $500 மில்லியன் மாகாண அளவிலான முதலீட்டின் ஒரு பகுதியாக இந்தத் திட்டங்கள் அமைகின்றன என்றும் . ஒட்டுமொத்த முதலீடு 23 குழந்தை பராமரிப்பு நிலையங்களை உள்ளடக்கிய 37 பாடசாலைகள் தொடர்பான திட்டங்களை உருவாக்க உதவும். என்றும் இந்த நிதியானது ஒன்ராறியோ முழுவதும் உள்ள பள்ளிகளில் கிட்டத்தட்ட 15,700 புதிய மாணவர்களுக்கான இட வசதியையும் 1,500 அரச அனுமதி பெற்ற குழந்தை பராமரிப்பு நிலையங்களையும் உள்ளடக்கின்றன என்று ரொறன்ரொ கல்விச் சபையின் அதிகாரி தெரிவித்தார்.
“ஒன்றாரியோ மாகாணத்தில் நாங்கள் புதிய பாடசாலைகளை கட்டுகிறோம், மேலும் குறைந்த கட்டணத்தில் குழந்தை பராமரிப்பு நிலையங்களை உருவாக்குகிறோம், மேலும் ஒன்ராறியோ மாணவர்கள் மிகவும் பாதுகாப்பான வகுப்பறைகளில் கற்பதை நாம் உறுதி செய்வதால், அவர்களுக்கு நம்பிக்கையையும் வாய்ப்பையும் உருவாக்குகிறோம்” என்று மாகாண கல்வி அமைச்சர் லெட்சே அவர்கள் தெரிவித்தார்.
மேலும், நவீன காற்றோட்ட அமைப்புகளுடன் கூடிய அதிநவீன வசதிகளைஏற்படுத்துவதன் மூலம். மாணவர்கள் நேரில் கற்றுக்கொள்வதற்கு வாய்ப்புக்கள் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம், அதனால்தான் எங்கள் அரசாங்கம் கட்டுமானத்தை துரிதப்படுத்தும் ஒரு பெரிய முதலீட்டை வழங்குகிறது. பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் சமூகங்கள் இந்த விடயத்தை நன்கு உணர்ந்துள்ளார்கள்.” என்றும் கல்வி அமைச்சர் தெரிவித்தார்.
இங்கு காணப்படும் படங்கள் ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள போப்லர் ரோடு கனிஸ்ட பாடசாலைக்கு மற்றுமொரு கட்டடத்தையும் கட்டுவதற்கான அறிவிப்புக்களை அன்றைய தினம் கல்வி அமைச்சர் விடுத்தபோது எடுக்கப்பட்டவையாகும்.
(படங்கள் மற்றும் செய்தி;_ ARJUNE L.J.I)