மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப்
மன்னார் நிருபர்
(3-05-2022)
நாடு தற்போது எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் பாரிய வறுமைக்கு மத்தியில் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்றனர்.இந்த நிலையில் அரச சார்பற்ற அமைப்புகளின் ஊடாக பல்வேறு உதவித் திட்டங்கள் மக்களுக்கு கிடைக்கின்றமை ஓர் வரப்பிரசாதம் என மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தெரிவித்தார்.
மன்னார் பிரதேசச் செயலகத்தில் வைத்து இன்று செவ்வாய்க்கிழமை (3) மதியம் தெரிவுசெய்யப்பட்ட 120 குடும்பங்களுக்கு அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,
நாடு தற்போது எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் மக்கள் பாரிய வறுமைக்கு மத்தியில் உணவுத் தட்டுப்பாட்டை எதிர்நோக்கி வருகின்றனர்.இந்த நிலையில் அரச சார்பற்ற அமைப்புகளின் ஊடாக பல்வேறு உதவித் திட்டங்கள் மக்களுக்காக எங்களை நோக்கி வந்து கொண்டு இருக்கின்றது.
-குறித்த உதவித் திட்டங்களை மக்களுக்கு பகிர்ந்து வழங்கும் நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டு வருகின்றோம்.தற்போது பல்வேறு நெருக்கடிகள் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையில் முந்தைய போல் மக்களுக்கு வழங்குவதற்கான உதவிகள் தற்போது எமக்கு கிடைப்பது குறைவாக உள்ளது.
-அவ்வாறு இருந்தும் கிடைக்கின்ற உதவிகள் உண்மையில் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்கள் கிராம அலுவலர்கள் ஊடாக தெரிவு செய்யப்பட்டு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதற்கு அமைவாக கடந்த இரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் ஊடாக மலேசியாவை தளமாக கொண்ட மலேசியா TECH Outreacn அமைப்பின் நிதி உதவியுடன் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் 120 குடும்பங்களுக்கு சுமார் 4000 ரூபாய் பெறுமதியான அத்தியாவசிய உலர் உணவு பொதிகள் வழங்க உள்ளதாக தெரிவித்தார்கள்.
குறிப்பாக மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சாந்திபுரம்,எமில் நகர் மற்றும் ஜிம் ரோன் நகர் ஆகிய மூன்று கிராமங்களில் இருந்தும் மொத்தமாக 120 குடும்பங்களை தெரிவு செய்து தருமாறு கோரி இருந்தனர்.அதற்கு அமைவாக குறித்த கிராமங்களை உள்ளடக்கிய 120 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டு உள்ளனர்.
-அவர்களுக்கு குறித்த உலர் உணவு பொதிகள் வழங்கி வைக்கப்படுகின்றது.மேலும் குறித்த கிராமங்களில் பல குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உதவிகள் கிடைக்காத குடும்பங்களுக்கு வேறு நிறுவனங்கள் வழங்குகின்ற போது அவர்களும் குறித்த திட்டத்தில் உள் வாங்கப்பட்டு உதவிகள் வழங்கப்படும்.
தற்போதைய உதவிகளை வழங்கி வைத்துள்ள யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்திற்கும் நிதி உதவியை வழங்கியுள்ள மலேசியாவை தளமாக கொண்ட மலேசியா TECH Outreacn அமைப்பிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.என அவர் மேலும் தெரிவித்தார்.
-இதன் போது மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் தெரிவு செய்யப்பட்ட சாந்திபுரம்,எமில் நகர் மற்றும் ஜிம் ரோன் நகர் ஆகிய மூன்று கிராமங்களைச் சேர்ந்த 120 குடும்பங்களுக்கு மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் தலைமையில்,யாழ்ப்பாணத்தில் இயங்குகின்ற சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளர் இன்ப ரூபன்,மன்னார் நகர சபையின் உப தவிசாளர் ஜாட்சன் மற்றும் கிராம அலுவலர்கள் இணைந்து வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.