(மன்னார் நிருபர்)
(5-05-2022)
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் மன்னார் மலேரியா தடை இயக்கம் ஆகியவற்றின் ஏற்பாட்டில்,மலேரியா விழிப்புணர்வு நடைபவணி இன்று வியாழக்கிழமை (5) காலை 8.30 மணியளவில் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை க்கு முன் ஆரம்பமானது.
மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தலைமையில் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் ஆரம்பமானது.
குறித்த ஊர்வலத்தில்,வைத்தியர்கள்,சுகாதார வைத்திய அதிகாரிகள்,வைத்தியசாலை பணியாளர்கள்,பாடசாலை மாணவர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இதன் போது மலேரியா தொற்று தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கலந்து கொண்டனர்.
-குறித்த ஊர்வலமானது மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையில் ஆரம்பமாகி,பிரதான வீதியூடாக மன்னார் பஜார் பகுதியை சென்றடைந்தது.
மீண்டும் அங்கிருந்து மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை யை சென்றடைந்தமையும் குறிப்பிடத்தக்கது.