கடந்த 30-04-2022 சனிக்கிழமை மதியம் ஸ்காபுறோவில் அமைந்துள்ள MAJESTIC CITY தமிழர் அங்காடியின் உள்ளே திறந்து வைக்கப்பெற்ற EXPRESS AIR ‘எக்ஸ்பிரஸ் ஏயர்’ பிரயாண முகவர் நிலையத்தின் திறப்பு விழாவில் பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்
திறப்பு விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்து அழைக்கப்பெற்ற அனைவரையும் அன்புடன் வரவேற்ற உரிமையாளர் ரஜீவன் மற்றும் அவரது துணைவியார் ஆகியோரின் அழைப்பைஏற்று ஒன்றாரியோ மாகாண அரசின் முதியோர்கள் நலன் காக்கும் அமைச்சர் றேமன்ட் சோ அவர்கள் . தமிழ் பேசும் மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர்களான திருவாளர்கள் லோகன் கணபதி, விஜய் தணிகாசலம் மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம். யுகம் வானொலி நிறுவனத்தின் அதிபர் கணபதி ரவீந்திரன். MAJESTIC CITY தமிழர் அங்காடி நிறுவனத்தின் முகாமையாளர் திரு கிறிஸ் சிவக்கொழுந்து உட்பட பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டிருந்தனர்.
அழைக்கப்பட்ட விருந்தினர்கள் மற்றும் நண்பர்கள் உறவினர்கள் என அனைவரையும் அன்புடன் வரவேற்ற உரிமையாளர் ரஜீவன் மற்றும் அவரது துணைவியார் ஆகியோர் விருந்துபசாரத்தையும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். வர்த்தகப் பிரமுகர்களான நண்பர்கள் பலர் அங்கு கலந்து கொண்டு தங்கள் ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து மகிழ்ந்தனர்.
PHOTOS BY Praba;- Designs 2 Prints Ltd