மாகாணத் தேர்தலில் என்டிபி கட்சி ஆட்சிக்கு தெரிவானால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு குறைந்த கட்டண பற் சிகிச்சைத் திட்டம் –
ஒன்றாரியோ என்டிபி கட்சித் தலைவர் தெரிவிப்பு
‘எதிர்வரும் யூன் மாதம் 2ம் திகதி நடைபெறவுள்ள ஒன்றாரியொ மாகாணத் தேர்தலில் என்டிபி கட்சி ஆட்சிக்கு தெரிவானால் குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு இலவச அல்லது குறைந்த கட்டண பற் சிகிச்சைத் திட்டம் அறிமுகமாகும். மாகாண பாராளுமன்றத்தில் சட்டமூலமாகக் கொண்டுவரப்பட வுள்ள இந்த திட்டத்தினால் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள இலட்சக் கணக்கான குறைந்த வருமானம் பெரும் குடும்பங்கள் பயனடையவுள்ளன”
இவ்வாறு தெரிவித்தார் ஒன்றாரியோ என்டிபி கட்சித் தலைவர் அன்றியா ஹாவார்த் .
இன்று பிற்பகல் ரொறன்ரோ மாநகரில் இயங்கிவரும் தமிழ் ஊடகங்களின் பிரதம ஆசிரியர்களோடு அவர் நடத்திய நடத்திய ஊடகச் சந்திப்பின்போதே அன்றியா இவ்வாறு தெரிவித்தார்.
மேற்படி ஊடகச் ச்நதிப்பி இந்த மாகாண அரசிற்கான தேர்தலில் போட்டியிடும் தமிழ் பேசும் வேட்பாளர்களான நீதன் சண்முகராஜா மற்றும், செந்தில் மகாலிங்கம் உட்பட வேறு மொழிகள் பேசும் வேட்பாளர்கள் மூவுரும் பங்கெடுத்தனர்.
முதலில் ஸ்காபுறோ கில்வூட் தொகுதியின் வேட்பாளர் கட்சித் தலைவர் அன்றியா அவர்களை அறிமுகம் செய்த பின்னர் அவரிடம் ஒலி வாங்கியைக் கையளித்தார்
” ஒன்றாரியோ வாழ் தமிழ் மக்களுடன் நீண்ட நாட்கள் தொடர்பு கொண்டு அவர்களின் நலன்கருதியும் மற்றும் அவர்கள் தாயகத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் மற்றுமு; அஞ்சலி நிகழ்வுகள் ஆகியவற்றில் அதிக ஈடுபாடு காட்டியவள் என்ற வகையில் தமிழ் மக்களின் குரல்களாக விளங்கும் தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகளை இங்கு சந்திப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன்” என்று கூறியவண்ணம் தனது உரையை ஆரம்பித்த ஒன்றாரியோ என்டிபி கட்சித் தலைவர் அன்றியா ஹாவார்த் அவர்கள். மாகாணத்தில் ஆட்சியில் உள்ள டக்போர்ட் தலைமயிலான கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கம் இந்த மாகாணத்தின் மக்களுக்கு பல அநியாயங்களைச் செய்துள்ளது என்று கூறி அவற்றால் மக்களுககு ஏற்பட்ட பாதிப்புக்கள் பற்றியும் எடுததுரைத்தார்.
உதாரணமாக புதிய பாடசாலகளைக் கட்டுகின்றோம் என்று கூறுகின்ற முதல்வர் டக்போர்ட மற்றும் அவரது கல்வி அமைச்சர் ஆகிய இருவரும் எத்தனையோ பாடசாலைகளை மூடுவதற்கு காரணமாக விளங்கியுள்ளார்கள்.
அத்துடன் பாடசாலை ஆசிரியர் மற்றும் தாதியர்கள் ஆகியோர் விடயத்திலும் இந்த அரசாங்கம் அவர்களுக்கு பாதகத்தையே செய்துள்ளது.. அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றும் பணிகளுக்கான சன்மானமாக சம்பள உயர்வை மாகாண அரசு அங்கீகரிக்கவில்லை. ‘ போன்ற குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார்.
தொடர்ந்து இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் சொல்லப்பட்டுள்ள மாகாண மக்களுக்கான இலவச அலலது குறைந்த கட்டண பற் சிகிச்சையின் சிறப்புக்கள் எவையென்றும் ஒன்றாரியோ என்டிபி கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழ் பேசும் ஊடகப்பிரதிநிதிகளை வரவேற்று ஸ்காபுறோ தென் மேற்கு தொகுதியின் வேட்பாளர் நீதன் சண்முகராஜா அவர்கள் உரையாற்றினார். அவர் தனது உரையில் என்டிபி கட்சிக்கு தொடர்ச்சியாக ஆதரவளித்து வரும் தமிழ் ஊடக நிறுவனங்களோடு கட்சியின் தலைவரும் ஏனைய ஸ்காபுறோ பிராந்திய வேட்பாளர்களும் சந்திப்பதை தமிழ் பேசும் வேட்பாளர் என்ற வகையில் உவகை கொள்வதாகக் குறிப்பிட்டார்.
பின்னர் கேள்வி நேரத்தின்போது அங்கு சமூகமளித்திருந்த சில ஊடகங்களின் பிரதிநிதிகள் நியாயபூர்வமான கேள்விகளை முன்வைத்தனர்.
கிருஸ்ணா ரெலிகாஸ்ட் ஊடகத்தின் நிறுவனர் தனது கேள்வின் போது ” இதற்கு முன்னர் மாகாண ஆட்சியில் இருந்த இரண்டு கட்சிகளுமே வாக்குறுதிகள் வழங்குவதும் பின்னர் அவற்றை நிறைவேற்றாமல் இருந்துள்ளன என்றும் அவற்றைப் போலவே இந்த தேர்தலில் வாக்குறுதிகளை மிகவும் கவனமாகப் பேணும் விடயத்தில் தாங்கள் எவ்வாறு நடந்து கொள்வீர்கள் என்று தனது கேள்வியை முன்வைத்தார்.
அதற்கு பதிலளித்த கட்சித் தலைவர் அன்றியா அவர்கள் நான் மட்டுமல்ல எமது கட்சியின் வேட்பாளர்களாகத் திகழும் அனைவரும் திறமை வாய்ந்தவர்கள். எனவே வாக்குறுதிகளைப் பேணுவதில் நாம் மிகவும் கவனமாக இருப்போம் என்றார் அவர்.
தொடர்ந்து கேள்வி பதில் நேரத்தில் தற்போதைய கொன்சர்வேர்ட்டிவ் கட்சி அரசின் மக்கள் விரோத செயற்பாடுகளை விபரித்த கட்சித் தலைவர் அன்றியா அவர்கள் இந்த அரசாங்கம் விட்ட தவறுகளை திருத்தி மாகாணத்தை ஒரு நல்ல நிலைக்கு கொண்டுவரும் முயற்சிகளில் நாம் .இறங்கி வேலை செய்வோம்’ என்றார்.
இங்கே காணப்படும் படங்கள் கனடா உதயன் பிரிவினரால் எடுக்கப்பட்டவையாகும்