இலங்கையில் கடந்த மே மாதம் 9, ஆம் 10 ஆம் திகதிகளில் இடம்பெற்ற கலவரங்களின் தொகுப்பு,
திருமலைநவம்.
அலரிமாளிகையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட கலவரத்தால் பல மரணங்கள் படுகொலைகள், தற்கொலைகள், நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயம். தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள் சொத்துக்கள், கொழுத்தப்பட்ட வாகானங்கள்; கோடிக்கணக்கான பெறுமதியுள்ள சொத்துக்கள், பரிநாசம் ஆக்கப்பட்டுள்ளது.
அலரி மாளிகைக்கு முன்னாலும் காலி முகத்திடலிலும் போராட்டத்தில் ஈடுபடடிருந்த பெண்கள் மற்றும் பாதிரிமார்மீது கண் மூடித்தனமாக தாக்கப்பட்டமையின் பின்னணியில் யார்? இருக்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர்கள், இந்நாள் மந்திரிகள் பாரளுமன்ற உறுப்பினர்கள் பிரதேச தலைவர்கள் நகர மேயர்கள் பொதுஜனபெரமுன ஆதரவாளர்கள் ஆகியோரின் வீடுகள், வாசல்கள், வாகனங்கள, உடமைகள் எரியூட்டப்பட்டு, அழிக்கப்பட்ட அனர்த்தம். உயிருக்குப்பயந்து பிரமுகர்கள் தலைமறைவு. . நாடு யுத்தபூமியாக கலவரக்காடாக மாறிவிட்ட அகோரம்.
அவசரகால சட்டம் மற்றும் ஊரடங்கு சட்டம் பிறப்பித்ததன் காரணமாக மக்கள் அனைவரும் மயான பூமிக்குள் வாழ்வதைப்போன்ற அச்சம். உண்ண உணவில்லை உலைவைக்க எரிபெருள் இல்லை. பால்மா கிடைக்காமல் தாய்மார் பறந்து திரியும் அவலம். பட்டினி சாவை எதிர் நோக்கும் பரிதாபம் நாட்டின் அமைதிக்காக பிரார்த்திக்கும் ஆலய குருமார், பாதிரிமார், பிக்குமார் ஆட்சி மாற்றத்தை நோக்கி மக்களின் படையெடுப்பு. இதுதான் இன்றைய ஸ்ரீலங்கா.
போராட்ட ஆரம்பத்துக்கான மூலவரலாறு.
கடந்த மே 9 ஆம் திகதி அலரி மாளிகையில் (9.5.2022) தொடக்கிவைக்கப்பட்ட அடாவடிக் குழப்பத்தின் காரணமாக நாடே அல்லகோலப்பட்டது மாத்திரமல்ல. கலவரங்களும் காடைத்தனங்களும் கட்டவிழ்த்து விடப்பட்டதன்காரணமாக வரலாறு காணாத கொந்தளிப்பை நாடு கண்டுகொண்டிருக்கிறது. இதை கலவரம் என்று கூறுவதா ஆர்ப்பாட்டம் என்று அடையாளப்படுத்துவதா.? அல்லது புரட்சி என்று கூறுவதா போராட்டம் என்று சொல்ல முடியுமா? என்று அடையாளப்படுத்த முடியாமல் மக்கள் திணறுகிறார்கள்.
நாட்டில் ஏற்பட்ட பொருளதார நெருக்கடிகள் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் மிமோசமான நிலயில் பாதிக்கப்பட்ட காரணத்தின் நிமித்தம் அரசாங்கத்தின் ஆற்றல் இன்மையையும் தலைவர்களின் ஆளுமைக் குறைவையும் கண்டித்து “ஜனாதிபதி கோத்தபாய பதவி விலகவேண்டும் மஹிந்த தலைமையிலான அரசாங்கம் கலைக்கப்படவேண்டும்” என்ற கோஷங்களை முன்வைத்து ஜனாதிபதி காரியாலயத்துக்கு அருகில் காலி முகத்திடலில் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் (9.5.2022) மக்களால் தன் முனைப்பான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
இப்போராட்டம் எந்த சக்தியின் துண்டுதலாலும் ஆரம்பிக்கப்பட்டதல்ல. மக்களின் தன் முனைப்பான போராட்டமாக பரிணமித்தது. வன்முறையற்ற ஜனநாயக அறவழிப் போராட்டமாக இது ஆரம்பிக்கப்பட்டது. காலி முகத்திடலில் கோத்தா ஹோ கம என்ற கிராமத்தை உண்டாக்கி மாற்று ஆட்சியை மையப்படுத்தி கூடாரம் அடித்து மக்கள் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது.
தேசியக்கொடிகளைப்பறக்கவிட்டு இளைஞர்கள் யுவதிகள் பல்கலை மாணவர்கள் பொது மக்கள் தொண்டர் அமைப்புக்கள் என்ற வகையில் இப்போராட்டக்காரர்கள் ஒன்று கூடினார்கள்.
இவர்களுக்கு சட்டத்தரணிகள் ஆசிரியர்கள் அதிகாரிகள் பல்கலைக்கழக மாணவர்கள் என பல தரப்பினரின்; ஆதரவின்பேரில் வலுப்பெற்ற நிலையில் அடுத்தகட்டமாக அலரி மாளிகை;கு முன் மைனா ஹோ கம என்ற பாசறை அமைத்து பலவாரங்களாக அமைதிப்போராட்டத்தை நிகழ்த்தி வந்தார்கள்.
இப்போராட்டம் நகர்ந்து கொண்டிருந்த நிலையில் ஏப்ரல் 28 ஆம் திகதி ஜனாதிபதியின் நுஹேகொட இல்லத்துக்கு அருகில் மக்கள் பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்;டார்கள். அந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியது. இந்த ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பொலீசார் கண்ணீர்புகை பிரயோகமும் தண்ணீர் தாரை வீச்சும் மக்கள் மீது நடத்தப்பட்டது. இதனால் கொழும்பு மாவட்டம் முழுவதும் பொலீஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
இதேபோன்று கடந்த 6 ஆம் திகதி (6.5.2022) ஜனாதிபதி கோத்தா மற்றும் ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கத்தை பதவி விலக கோரி நாடாளவிய ரீதியில் ஹர்த்தாலுடன் பாரிய போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன. ஜனாதிபதியும் பிரதமரும் பதவி விலகவேண்டும் என்ற போராட்டம் உக்கிரம் அடைந்து கொண்டது. ஹர்த்தால் காரணமாக நாடு முற்றாக முடங்கிப்போன நிலையில் அன்றைய தினம் இரவு ஜனாதிபதியால் அவசர கால சட்டம் பிரகடனப் படுத்தப்பட்டது. போராட்டக்காரர்களை பணிய வைக்கும் நோக்கிலும் மயமுறுத்தும் நோக்கத்துடனும் அவசரகால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டதற்கு உள்நாட்டவர்களாலும் வெளிநாட்டு ராஜதந்திரிகளாலும் பலத்த கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் கடந்த ; 9 ஆம் திகதி (9.5.2022) காலை பிரதமர் மஹிந்தராஜபக்ஷ அலரி மாளிகையில் ஒரு கூட்டத்தை கூட்டியிருந்தார். தனது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்கள்; பாராளுமன்ற உறுப்பினர்கள்; மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச சபை உறுப்பினாகள் என 1000 கணக்கானோர் இதில் கலந்து கொண்டிருந்தார்கள். பிரதமர் பதவி விலக கூடாது என்பதை வலியுறுத்தவே இக்கூட்டம் கூட்டப்பட்டது.
இக்கூட்டத்தில் பிரதான பங்கெடுத்துக்கொண்ட முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னான்டோ உரையாற்றும்போது ;காலி முகத்திடல் கோத்தா கமவை துப்பரவு செய்யவேண்டிய நேரம் வந்துள்ளது.
எல்லோரும் போருக்கு தயாராகுங்கள்’’ என ஆவேசமாக உரையாற்றியதுடன் அலரி மாளிகைக்கு முன் கூடாரம் அடித்திருந்த மைனா ஹோ கம வுக்குள் புகுந்து ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்கும் எதிராக ஆர்ப்பாட்டம் நடத்திக்கொண்டிருந்தவர்கள் மீது அடாவடித்தனம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. பொல்லு தடி கொண்டு தாக்கியது மாத்திரமல்ல அப்பாவிகளான ஆர்ப்பாட்டக்காரர்களை கண் மூடித்தனமாக காயப்படுத்தினார்கள். ஆர்ப்பாட்டக்காரர்களை அடக்க இராணுவமும் துணைக்கு வரவழைக்கப்பட்டது. பெண்கள் பொது மக்கள் என பாராமல் ஈவிரக்கமின்றி ஆர்ப்பாட்டக்காரரர்கள் தாக்கப்பட்டார்கள். மைனா ஹோ கம அழிக்கப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்துக்காக காலி வட்டரெக்க சிறையிலிருந்து 200 புனர் வாழ்வளிக்கப்பட்ட கைதிகள் கொண்டுவரப்பட்டதாகம் இவர்களை சிறை அதிகாரி ராமநாயக்க அழைத்து வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கும்பல் அடுத்தகட்ட நடவடிக்கையாக காலிமுகத்திடலுள்ள
கோத்தா ஹோ கமவுக்குள் புகுந்து கூடாரங்களை தரை மட்டமாக்கி ஆர்ப்பாட்டக்காரர்களை மூர்க்கத்தனமாக தாக்கியதில் நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். பலர் மயங்கி விழுந்தனர்.; சம்பவத்தை கேள்வியுற்றும் தொலைக்காட்சியில் பார்த்தும தொலை பேசி வாயிலாக அறிந்தும் ஆயிரக்கணக்கான போதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவாளர்கள் சம்பவ இடத்துக்கு ஓடிவந்து மஹிந்தவின் ஆதரவாளர்களான குண்டர்களை அடித்து விரட்டினார்கள்.
கோத்தா ஹோ கம போராட்டகாரரர்களுக்கு உதவ கொழும்பு மற்றும் புறநகர் பகுதியிலிருந்து ஏராளமான ஆதரவாளர்கள் பெருகியதன் காரணமாக போராட்டம் பெரியளவு வெடித்தது காலி முகத்திடல் கலவர பூமியாக முhறியது. இது நாடு தருவிய போராட்டமாக மாறிக்கொண்டதன் விளைவவாக பாரிய தாக்குதல்களும் ஆர்ப்பாட்டங்களும் அழிவுகளும் இடம் பெற்றுக்கொண்டன.
ஆர்ப்பாட்டத்தின் அழிவுகள். மரணங்கள் கடந்த திங்கட்கிழமை காலி முகத்திடல் மற்றும் நாடு தழுவிய கலவரங்கள் காரணமாக 8 நபர்கள் மரணமடைந்ததுடன் 250 மேற்பட்டவர்கள் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்திய சாலயிலும் நாட்டின் பிரதேச வைத்திய சாலைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுஜனபெரமுனவின் பொலநறுவை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினாகிய அமரகீர்த்தி அத்துக்கொரள நிட்டம்புவவிற்கு சென்ற வேளை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது துப்பாக்கி பிரயோகம் செய்துள்ளார். சுட்டதன்காரணமாக மூன்று பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். அதில் ஒருவர் தலத்திலையே மரணமாகியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அவரை வாகனத்துக்குள் வைத்து தாக்க முற்பட்டனா.; அவர் வெளியே இறங்கி கட்டிடம் ஒன்றில் தஞ்சம் அடைந்தபோதும் கட்டிடம் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைக்கப்பட்டது. மக்களின் சுற்றி வலைப்பிலிருந்து தப்ப முடியாத சூழ் நிலையில் தன்னைத் தானேதுப்பாக்கியால் சுட்டுக் கொண்டதுடன் அவரது மெய்க்காவலரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிந்தி கிடைத்த தகவலின்படி ஆர்ப்பாட்ட காரர்களின் தாக்குதலால்தான் அவர் உயிர் இழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கியதன் காரணமாக இமதுவ பிரதேச சபைத்தலைவர் ஏ.வி சரத்குமார மரணித்துள்ளார். இரவு அவர் வீட்டில் இருந்த வேளை போராட்டக்காரர்களின் தாக்குதலுக்கு ஆளாகி படுகாயமடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் மரணமடைந்துள்ளார்.
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டுககொண்டிருந்த பொதுமகன் ஒருவர் மாரடைப்பு காரணமாக இறந்துள்ளார். அதே போன்றே அலரி மாளிகை;கு முன்பாக இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது; கலகமடக்க நின்ற பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவர் காயம்பட்டு உயிர் இழந்த சம்பவமும், கலகமடக்க கண்ணீர் புகைக் குண்டை வீசும் ஆயுதத்தை பயன்படுத்திக் கொண்டிருக்கும்போது அந்த ஆயுதம் வெடித்து உப பொலீஸ்பரிசோதகர் ஒருவர் தலத்திலையே மரணித்த சம்பவம் ஆகியவற்றுடன் வீரக்கெட்டிய பிரதேச சபைத்தலைவரின் இல்லத்துக்கு அருகில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது துப்பாக்கி பிரயோகத்தின் காரணமாக இருவரும் என பாராளுமன்ற உறுப்பினர் 1. பிரதேச சபை தவிசாளர் 1. பொலீஸ் அதிகாரி 2. பொது மக்கள் 4 பேர் என 8 பேர் இறந்ததாக பொலீஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மந்நிரிகள் பாராளுமன்ற உறுப்பினாகள்; மற்றும் ஆதரவாளர்கள் வீடுகள் தீக்கிரை இக்கலவரத்தின் காரணமாக முன்னாள் அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுன ஆதரவாளர்கள் மற்றும் பிரதேச சபை மாகாணசபை உறுப்பிhகள் ஆகியோரின் வீடுகள் சொத்துக்கள் வாகனங்கள் மற்றும் உடமைகள் கட்சி அலுவலகங்கள் தொழிச்சலைகள் நாசமாக்கப்பட்ட சம்பவம் நாட்டின்பலபகுதிகளிலும் இடம் பெற்றுள்ளது. கடந்த செவ்வாயக்கிழமை இக்கட்டுரை பதியப்படும் வரை 48 நபர்களின் வீடுகள் எரித்தும் உடைத்தும் சேதமாக்கியும் அழிக்கபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
அவ்வகையில் மஹிந்த ராஜபக்ஷவின் ஹம்பாந்தோட்டை மெதமுல்லையிலுள்ள பூர்வீகவீடும் குருநாகலில் உள்ள வீடும் காரியாலயமும் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. அதேபோன்றே கோடிக்கணகட்கான பெறுமதி வாய்ந்த கம்பகா மாவட்ட மல்வானையிலுள்ள முன்னாள் நிதியமைச்சர் பஷில்ராஜபக்ஷவின் வீடு முற்றாக எரிக்கப்பட்டு துவாம்ஷம் செய்யப்பட்டுள்ளது. இந்த வீடு வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானதென்றும் பஷில் ஆட்சியிலிருக்கும்போது பலாத்காரமாக பறித்து எடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து வழக்கொன்று நீதி மன்றில் நிலுவையிலுள்ளதாக சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதிக்கு மிகவும் வாலாயமான சோதிடம் கூறிவரும் ஞானா அக்கா என்று அழைக்கப்படுகிற அனுராதபுரத்தை சேர்ந்த சோதிடரின் வீடும் அவரது ஹொட்டலும் ஆர்ப்பாட்ட காரர்களால் எரியூட்டப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச விமலவீர திஸநாயக்க ஹெகலிய ரம்புக்வெல பந்துலகுணவர்த்தன சமல்ராஜபக்ஷ நிதி, நீதி அமைச்சர் அலி சப்ரி புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ஆகியோரின் வீடுகள் சொத்துக்கள் மொரட்டுவ நகரசபைத்தலைவர், குருநாகல் மேயர் மற்றும் குருநாகல் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்த்தனவின் களுத்துறை இல்லம,; அலுவலகம் பொதுஜனபெரமுனவின் முன்னாள் அமைச்சர் நிமல்லான்சாவின் நீர் கொழும்பில் அமைந்துள்ளவீடு கேகாலையின் பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியில்வாதியான மஹிபாலஹேரத் திருகோணமலை மாவட்டபாராளுமன்ற உறுப்பினர் கபில நுவன் அத்துக்கொரள பொதுஜனபெரமுனவின் தேசியப்படடியல் பாராளுமன்ற உறுப்பினராகிய பேராசிரியர் குணபாலரத்தின சேகர, அம்பலாங்கொடை நகரவபைத்தலைவர் குரநாகல் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் மாத்தறை காஞ்சனவீரசேகரா தம்புள்ள யாபாஹம பிரதேசத்திலுள்ள முன்னாள் அமைச்சர் ஜனகபண்டார அம்பாறை தமன பிரதேச தவிசாளர், கிழக்குமாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புள்ளாவின் காத்தான்குடி வீடு மற்றும் சுதந்திரக்கட்சியின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் யாழ் சண்டிலிப்பாயிலுள்ள அலுவலகமும் போராட்டக்காரர்களால் தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் முஸ்லீம் காங்கிரஸ் உபதலைவருமான ஹாபீஸ் நஸீர் அகமட் பொதுஜன பெரமுன கட்சிக்கு அண்மையில்தாவி ராஜாங்க அமைச்சர் பதவியை எடுத்துக்கொண்டவரின் ஏறாவூர் விடு காரியாலயம் என சுமார் 48 பேருக்கு மேற்பட்ட பிரமுகர்களின் வீடுகள், சொத்துக்கள், வாகனங்கள், அலுவலகங்கள் அவர்களுக்கு சொந்தமான தொழிற்சாலைகள் அழிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டுப்போன சம்பவங்கள் கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய இரு நாட்களுக்குள்ளும் நடந்தேறியுள்ளது. இன்னும் கவலை தருகின்ற விடயம் ஜனாதிபதி கோத்தபாயவின் வெற்றிக்கு அரும்பாடு பட்டு உழைத்த சிங்களப்பாடகர் ராஜ் வீரரட்னவின் வீடு தாக்கப்பட்டு நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளது.
இவை மட்டுமன்றி இராணுவ அதிகாரிகளின் வீடுகள் ஆதரவாளர்களின் வீடுகள் தாக்கப்பட்டதுடன் மேல்மாகாண சிரேஷ்ட பொலீஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் ஆர்ப்பாட்டக்காரார்களால் கடுமையாக தாக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளாh.;
மஹிந்த மற்றும் ஜனாதிபதியின் பெற்றோர்களான டி.ஏ ராஜபக்ஷவுக்கும் தாயார் கோதனா சந்தினா ராஜபக்ஷவுக்கு ஹம்பாந்தோட்டை வெதமுல்லையில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபிகள் அடித்து நொருக்கப்பட்டிருப்பதுடன் தங்காலையிலுள்ள ராஜபக்ஷவின் உருவ சிலை ஆர்ப்பாட்டக்காரர்களால் அடித்து நொருக்கப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த 9 ஆம் திகதி மஹிந்தவின் ஆதரவாளர்கள் என்ற வகையில் வெளி மாவட்டங்களிலிருந்து அழைத்து வருவதற்குப் பயன்படுத்தப்பட்ட பேருந்துகள், வாகனங்கள் ஆகியவை நகர மண்டபம் பன்னிப்பிட்டிய அத்துக்கிரிய பஞ்சிகாவத்தை போன்ற இடங்களில் வைத்து எரிக்கப் பட்டிருப்பதுடன் எரிகளில் தள்ளி சேதமாக்கப்பட்ட சம்பவங்களும் இடம் பெற்றுள்ளன.
ஊடகம் ஒன்றின் கணக்கெடுப்பின்படி சேதம் ஆக்கப்பட்ட எரியுட்டப்பட்ட வாகனங்கள் வீடுகள் சொத்துக்கள் விபரங்கள் இவ்வாறு கணக்கெடுத்துக்காட்டப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் தீக்கிரை ஆக்கப்பட்ட வாகனங்கள் 29 ஆகவும் அடித்து நொருக்கப்பட்ட வாகனங்கள் 15 ஆகவும் தீக்கிரயாக்கப்பட்ட வீடுகள் 8 ஆகவும் சேதமாக்கப்பட்டவை 23 வீடுகளாகவும் தென்மாகாணத்தில் சேதமாக்கப்பட்ட வாகனங்கள் 5 தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள் 7 அடித்து நொருக்கப்பட்ட வீடுகள் 9 எனவும் மத்திய மாகாணத்தில் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் 4 தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள் 6 அடித்து நொருக்கப்பட்ட வீடுகள் 5 சப்ரகமுவ மாகாணத்தில் தீக்கிரையாக்கப்பட்ட வாகனங்கள் 9 தீக்கிரையாக்கப்பட்ட வீடுகள் 8 அடீத்து நொருக்கப்பட் வீடுகள் 7 வடமத்திய மாகாணத்தில் 3 வாகனங்கள் தீக்கிரை 4 வீடுகள் சேதம். வடமேல் மாகாணத்தில் தீக்கிரை ஆக்கப்பட்ட வாகனங்கள் 5 சேதம் ஆக்கப்பட்ட வாகனங்கள் 13 தீக்கிரை ஆக்கப்பட்ட வீடுகள் 9 சேதமாக்கப்பட்ட வீடுகள் 15 கிழுக்கு மாகாணத்தில் சேதம் ஆக்கப்பட்ட வாகனங்கள் 3 ஊவாவில் 2 வீடுகள் சேதம் ஆக்கப்பட்டுள்ளன என தகவல்கள் பதிவாகியுள்ளது.
இக்கலவரத்தில் பெறுமதி மிக்க கார் என்று எண்ணப்படுகிற லம்போர்கினி என்ற கார் நீர்கொழும்பிலுள்ள அவன்ரா கார்டின் ஹொட்டலில் வைத்து பல வாகனங்களுடன் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளது.
அமைதியாகவும் அடக்கமாகவும் ஜனநாயக வழியில் இடம் பெற்ற அறவழிப் போராட்டக்காரர்கள் மீது தனது ஆதரவாளர்களை ஏவிவிட்டு கலவரமாக மாத்திய முன்னாள் பிரதமர் மஹிந்த கைது செய்யப்பட்டு சட்டத்தின்முன் நிறுத்தப்படவேண்டும் என நாடுதழுவிய சட்டத்தரணிகள் சங்கமும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில் அலரி மாளிகையிலிருந்து அவரும் அவரது குடும்பத்தாரும் தப்பி சென்றுள்ளனர். என்று சமூக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதே நேரம் நாட்டின் முக்கியஸ்தர்கள் நாட்டை விட்டு தப்பி சென்றுவிடக் கூடாது என்ற எச்சரிக்கை நோக்கத்துடன் ஆர்ப்பாட்டக்காரர்களால் ரத்மலான மற்றும் கட்டு நாயக்கா விமான நிலையம் சுற்றி வளைக்கப்பட்டு வருகிறது. இந்திய இராணுவம் இறங்கவிருக்கிறது என்ற வதந்தியை இந்திய உயர் ஸ்தானிகர் ஆலயம் கடுமையாக மறுத்துவருகிறது.
இதன்நடுவில் பொது சொத்துக்கு பங்கம் விளைவிப்போரை கண்ட இடத்தில் சுடும்படி பாது காப்பு அமைச்சு சட்டம் பிறப்பித்துள்ளநிலையில் கடந்த 10 ஆம் திகதி முல்லேரிய சந்தியில் பொலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டின் காரணமாகவும் கட்கமுகவில் இடம் பெற்ற சம்பவத்திலும் பலர் காயமடைந்துள்ளனர்.
நடந்த அசம்பாவிதங்களின் சூத்திரதாரிகள் கைது செய்யப்பட்டு நீதியின் முன் கொண்டுவாருங்கள் என சட்டமா அதிபர் பொலீஸ்மா அதிபருக்கு ஆணைபிறப்பித்துள்ளாh.; பாது காப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரட்ன பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்காதீர்கள் என கோரிக்கை விட்டிருக்கிறார். நாட்டின் சட்டம் ஒழுங்கு நீதி மற்றும் பாதுகாப்பு அனைத்தும் தலை சாய்ந்து காணப்படுகிறது.
சுதந்திரத்துக்கு பின்னும் முன்னும் சிறுபான்மை சமூகத்துக்கு எதிராக வன் முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட காலங்களை மீண்டும் திரும்பிப்பார்ப்பின்
1870 மருதானை சிஙகள் முஸ்லீம் இனக்கலவரம்
1883 கொட்டாஞ்சேனை மதக்கலவரம்.
1915 கப்பளை முஸ்லீம் சிங்கள கலவரம்
1939 நாவலப்பிட்டி கலவரம்
1956 கல்லோயாக்கலவரம்
1958 தமிழருக்கு எதிரான இனக்கலவரம்
1974 தழிழாராட்சி கலவரம்.
1977 தமிழருக்க எதிரான ஆவணிக்கலவரம்
1981 யாழ் கலவரம்
1983 தமிழருக்கு எதரான இனக்கலவரம்
2017 தப்புள்ள பள்ளிவாசல் கலவரம்
2018 அம்பாறை முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம்
2018 தெல்தெனிய திகன முஸ்லீம் மக்களுக்கு எதிரான கலவரம்
2019 குருநாகல் புத்தளம் கம்பஹா கலவரம்
என ஏராளமான கலவரங்களை சந்தித்த நாடாக இலங்கை காணப்படும் நிலையில் இன்றைய கலவரம் நாட்டை இன நிலைக்கு தள்ளாமல் பார்த்துக்கொள்ளவேண்டியது யார் கடமை.