அனுர குமார திசாநாயக்க தெரிவிப்பு
மக்களால் நிராகரிக்கப்பெற்ற ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றவே ரணில் விக்ரமசிங்க மீண்டும் இலங்கை பிரதமராகிறார் என தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் அனுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். இதற்கு அவர் கடுமையான கண்டிப்பையும் தெரிவித்துள்ளார்.
இலங்கை தலைநகர் கொழும்பில் திங்கட்கிழமை ஏற்பட்ட கலவரத்தை தொடர்ந்து பிரதமர் பதவியை மகிந்த ராஜபக்ச ராஜினாமா செய்தார்.
இதனிடையே, மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக ஐக்கிய தேசிய கட்சித்தலைவர் ரணில் விக்ரமசிங்க இலங்கை பிரதமராக பொறுப்பேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தற்பொது ரணில் விக்கிரமசிங்க பிரதமராகியுள்ளார்.
225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மற்ற கட்சிகள் ஆதரவுடன் ‘அனைத்து கட்சிகள் அடங்கிய அரசாங்கத்திற்கு’ ரணில் தலைமை தாங்குவர் என கூறப்படுகிறது.
ரணில் விக்ரமசிங்க எப்போதும் ராஜபக்ச குடும்பத்தை காப்பாற்றுபவராக இருந்து வருகிறார். தமிழர் தரப்பும் இதைத் தான் செய்து வருகின்றது
”வாறாயினும் கோட்டாபய ராஜபக்ச மற்றும் ரணில் விக்ரமசிங்க அரசாங்கத்தை யாரும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்” இவ்வாறு தெரிவித்துள்ளார் தேசிய மக்கள் சக்தி கட்சித்தலைவர் அனுர குமார திசாநாயக்க…. இதற்கு அவர் கடுமையான கண்டிப்பையும் தெரிவித்துள்ளார்.