கனடா- ஸ்காபுறோ நகரில் அமைந்துள்ள ஶ்ரீ வரசித்தி விநாயகர் தேவஸ்த்தானத்தை ஆரம்பித்து அதன் மூலம் நிறைவான ஒரு ஆலயத்தை நிர்வகித்து வரும் பிரதம குரு சிவ ஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களின் மற்றுமொரு சேவை வழங்கும் நிறுவனமே கனடா ஶ்ரீ வரசித்தி இந்துக் கல்லூரி’ ஆகும்.
கடந்த பல வருடங்களாக. தமிழ் மொழியுடன் இணைந்து சைவ சமயத்தையும் ஒழுக்க நெறிகளையும் மாணவ மாணவிகளுக்கு கற்பித்து வரும் இக்கல்லூரி கடந்த 15 வருடங்களாக சிறப்பாக நடத்தி வரும் ‘சிவத் தமிழ் விழா’ கடந்த 7ம் திகதி சனிக்கிழமை. கனடா கந்தசாமி ஆலய மண்டபத்தில் இடம்பெற்றது.
விழாவிற்கான ஏற்பாடுகளை சிவ ஶ்ரீ பஞ்சாட்சர விஜயகுமாரக் குருக்கள் அவர்களுடன் இணைந்து அவரது துணைவியார் மற்றும் கல்லூரியின் அதிபர் மற்றும் ஆசிரியப் பெருந்தகைகள் ஆகியோர் செய்திருந்தனர்.
விழாவின் பிரதம விருந்தினர்களாக கலாநிதி நா. சுப்பிரமணியன் ஐயா அவர்களும் சிவாகம கலாநிதி சிவஶ்ரீ சோமஸ்க் கந்தக் குருக்கள் அவர்களும் அழைக்கப்பெற்றிருந்தனர்.
ஏனைய பலர் சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பெற்றிருந்தனர். அவர்கள் அனைவரையும் விழாக்குழுவினர் சிறந்த முறையில். வுரவேற்று ஆசனங்களை வழங்கி அமரச் செய்து விழாவிற்கு எந்த இடையூறும் வராமல் கவனித்தும் தங்கள் பொறுப்புக்களை சிறப்புடன் கவனித்தனர்.
அங்கு இடம்பெற்ற கலை நிகழ்ச்சிகள். பாடல்கள் மற்றும் தேவாரங்கள் ஆகியவற்றை ஒப்புவித்தல் போன்றவை மாணவர்களால் அற்புதமான முறையில் மேடையில் இடம்பெற்றன.
குறிப்பாக நாடக வடிவில் சபையோருக்காக படைக்கப்பெற்ற கலை வடிவங்கள் ஒவ்வொரு விடயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து தயாரிக்கப்பெற்றிருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தொழில் நுட்ப ரீதியிலும்; இந்த கலைப் படைப்புக்கள் சிறப்பாக இடம்பெற்றன என்பதும் குறிப்பிட வேண்டிய அமச்ஙக்ள் ஆகும்.
இந்த அற்புதமான படைப்புக்ளை தங்கள் மாணவ மாணவிகளைக் கொண்டு பயிற்சிகளை வழங்கிய மேடையேற்றி வெற்றிகளை ஈட்டிய கல்லூரியின் ஆசிரியப் பெருந்தகைகள் பாராட்டுக்குரியவர்கள்.
வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டிய கருப்பொருளைக் கொண்டும் சமய வழியிலான தத்துவங்களை விளக்கும் காட்சிகளை மேடையேற்றியும் கல்லூரி நிர்வாகத்தினர் இவ்வருடத்தின் ‘சிவத் தமிழ் விழாவை’ அனைவராலும் பேசப்படும் பெருவிழாவாக படைத்தார்கள் என்றால் இது வெறும் புகழ்ச்சிக்கான வார்த்தைகள் அலல என்றே கூறலாம்.
சத்தியன்-