வி.எஸ்.சிவகரன்
(13-05-2022)
ரணிலின் பிரதமர் நியமனம் ஏலவே எதிர்பார்க்கப்பட்ட விடயம் தான்.இன்றைய பொருளாதார அரசியல் சூழ்நிலையை ஓரளவேனும் தற்காத்துக் கொள்ள ஏற்புடையவர்தான்.
ஆனாலும் இது மேற்குலகின் குறிப்பாக அமெரிக்கா இந்தியாவின் காய் நகர்ந்தலே அதிகம் தென்னாசிய பிரந்தியத்தில் அரசியல் ஸ்திரமின்மை நீடிப்பது இந்தியாவுக்கும் பிரச்சினையே
ரணிலை பிரதமர் ஆக்குவதில் மகிந்த ராஜபக்சவின் முன்மொழிவும் இருந்திருக்கலாம்.
ஏனெனில் தமது குடும்பத்தை பாதுகாக்க கூடியவரும் சிலவேளை சனாதிபதி பதவி விலகினாலும் ரணில் சனாதிபதி ஆகினாலும் தமக்கு ஆபத்து ஏற்பாடாது என உணர்ந்திருக்கலாம்.
வலிமையில்லாத எதிர்க்கட்சிகள் ஆளுமையில்லாத பலவீனமான எதிர்க்கட்சி தலைவர் அதனாலேயே உலகில் எங்கும் இல்லாத பேரதிஸ்டம் ரணிலுக்கு கிடைத்துள்ளது.
இது பல விதமான விமர்சனங்களை ஏற்படுத்தலாம்.ஆனாலும் மேற்குலகிற்கு தேவையான ஒருவர் இலங்கை அரசியலுக்கு தற்போது தேவைப்படுகிறார் என்பதே நிதர்சனம்.
சீனாவின் ஆதிக்கத்தை குறைத்துக் கொள்வதற்கு ரணிலை மேற்குலகமும் இந்தியாவும் பயன்படுத்தலாம் இலங்கைக்கு தேவையான உதவிகளை வழங்கலாம் சர்வதேச நாணய நிதியத்தையும் உதவ பரிந்துரைக்கலாம்.
குறுகிய காலத்தில் இலங்கையின் இடர்கால நிலை தளர்வடையலாம் அதன் மூலம் ரணில் விக்கிரமசிங்கவின் புகழ் அதிகரிக்கலாம் ரணிலை அரசியல் ரீதியாக பலப்படுத்த வேண்டிய தேவையும் இவர்களுக்கு உண்டு அதன் மூலம் நாம் இலங்கையை இலகுவாக கையாளலாம் என எண்ணலாம்.
ரணில் பதவி ஏற்றவுடன் அவசரமாகவே அமெரிக்கா இந்தியா தூதரகங்களின் வாழ்த்துகள் இதை மேலும் வலிமைப்படுத்துகின்றன
அதனால் தற்போது அறவே செல்வாக்கில்லாத ஐ.தே.க வும் ரணிலும் யுத்த வெற்றி நாயகர்கள் ராஜபக்ச குடும்பம் போல் பொருளாதார மீட்பு நாயகன் எனும் மகுடம் சிங்கள மக்களால் சூட்டப்படலாம்.
அது மேற்குலகின் தொலைநோக்கு நிகழ்ச்சி நிரலாக இருக்கலாம். இந்த நிலை ஏற்பட்டால் அதிகம் பாதிக்கப்படுவது ராஜபக்ச குடும்பமும் சஜித்பிரேமதாசாவும் தான் ஆகவே இந்த நியமனம் சிலருக்கு நன்மைகளையும் பலரது இருப்பையும் கேள்விக்குட்படுத்தும் ஆனாலும் ராஜபக்சக்கள் எவ்வளவு காலம் பிரதமராக தொடர விடுவார்கள் எனும் கேள்வியும் உண்டு .
மொத்தத்தில் இது ஒரு பூகோள அரசியல் நகர்வு ஆனாலும் சாதாரண பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் ஓரளவேனும் ஏற்றம் மிகு மாற்றம் ஏற்படலாம்.
இன்றைய சூழ்நிலையில் தமிழர் அரசியலை மதிநுட்பமாக கையாள தலைமையற்ற வெறுமைக்குள் சிக்கித்தவிக்கிறது தமிழினம்.
அரசியல் என்பது வெறும் மிதப்புக்களை நோக்குவதல்ல ………ஆழத்தையும் ஆராய்வதே…………
நன்றி
வி.எஸ்.சிவகரன்