சர்வதேச ஆன்மிக சஞ்சிகை இதழ் 3 (தை – பங்குனி 2022) ற்கான “தெய்வீகம்” வெளிவந்துள்ளது.
இவ்விதழின் பொறுப்பாசிரியரான ‘பண்ணிசைச்செல்வர்’ திரு.நா.ஞானச்செல்வன் (செல்வம்) அவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் மேன்மைகொள் சைவநீதியையும் – அறவழியிலான ஆன்மிகச் சிந்தனைகளையும் மேன்மக்கள் உணர்ந்து, அவ்வழி வாழ்வியல் முறைகளைக் கடைப்பிடித்து வையத்துள் வாழ்வாங்கு வாழ வேண்டும் – எனும் உயரிய நோக்குடன், இவ்விதழை மிகுந்த பிரயாசையுடனும், அர்ப்பணிப்புடனும் வெளியீடு செய்து வருவது பாராட்ட வேண்டிய நற்கைங்கரியமாகும்.
யாழ். நல்லூர் ‘தெய்வீகம்’ சர்வதேச ஆன்மீக சஞ்சிகையின் ஆசிரிய பீடத்தின் வழிகாட்டலில், பரோபகார சிந்தனை நிறைந்த கனடிய உறவுகளின் பேராதரவோடு திரு.செல்வம் அவர்கள், சஞ்சிகையை வெளியிட்டு வருவது தமிழுக்கும் – சைவத்திற்கும் வளம் சேர்ப்பதாக உள்ளது.
வளர்க அவரது ஆன்மிகப் பணி.
– வீணைமைந்தன்