பெட்ரோலை சேமிக்கும் விதமாக அத்தியாவசிய சேவைகளை தவிர பிற துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் நாளை பணிக்கு வரவேண்டாம் என்று இலங்கை பிரதமர் ரணில் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், பொது மக்கள் எரிபொருளுக்காக வரிசையில் நிற்பது பயனற்றது என்றும், பெட்ரோல் விநியோகத்திற்கு குறைந்தது இரண்டு நாட்களேனும் தேவைப்படும் எனவும் மின்சக்தி அமைச்சர் கூறியுள்ளார்.
எரிவாயு, மண்ணெண்ணெய் ஆகியவற்றை பெற்றுக் கொள்ளவதில் கொழும்பு மாவட்ட மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கிறார்கள் எனவும், இவர்கள் வீதிக்கிறங்கிய பின்னர் அவர் தூண்டி விட்டார், இவர் தூண்டி விட்டார் என குறிப்பிட வேண்டாம் எனவும் முஜிபுர் ரஹ்மான் சபையில் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், பொதுமக்கள் தமது கையில் பணமாக வைத்திருக்கக்கூடிய வெளிநாட்டு நாணயத்தின் பெறுமதி 15,000 டாலர்களில் இருந்து 10,000 டாலர்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.