எதிர்வரும் 29-05-2022 ஞாயிற்றுக்கிழமையன்று கனடா- ஸ்காபுறோ நகரில் நடைபெறவுள்ள கனடா உதயனின் ‘இலங்கைச் சிறப்பிதழ்’ வெளியீடு, பத்திரிகையின் 26வத ஆண்டு பூர்த்தியை கொண்டாடும் நிகழ்வு மற்றும் உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியரின் கலை இலக்கிய ஊடகப் பயணத்தின் 50வது ஆண்டு நிறைவின் பூரிப்பு ஆகியவற்றை ஒரே மண்டபத்தில் அனுபவிக்கும் நிகழ்வு இடம்பெறவுள்ளது.
மேற்படி சிறப்பிதழ் மற்றும் விழாவின் போது சபையோருக்கு கையளிக்கப்படவுள்ள சிறிய கைநூல் ஆகியவற்றில் பிரசுரிக்கும் வகையில் எமக்கு கிடைக்கப்பெற்ற கனடியப் பிரதமர். மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோரின் வாழ்த்துப் பத்திரங்கள் இங்கே காணப்படுகின்றன.