இந்த தேர்தலில் எமது தேர்தல் அறிவிப்புக்களின் முன்னணியில் உள்ளது மக்களுக்கு தாராளமான வாழ்க்கைக்கு உதவக் கூடிய வகையில் வாழ்க்கை செலவைக் குறைப்பதே. NDP வேட்பாளர் Doly Begum
எதிர்வரும் யூனு; 2ம் திகதி நடைபெறவுள்ள ஒன்றாரியோ மாகாணத் தேர்தலில் எமது தேர்தல் அறிவிப்புக்களின் பல முக்கிய விடயங்களைக் குறிப்பிட்டுள்ளோம். அவற்றுள் முன்னணியில் உள்ளது மக்களுக்கு தாராளமான வாழ்க்கைக்கு உதவக் கூடிய வகையில் வாழ்க்கை செலவைக் குறைப்பது தான் என ஸ்காபுறோ தென்மேற்கு தொகுதிக்கான NDP கட்சியின் வேட்பாளர் Doly Begum தெரிவித்துள்ளார்.
நேற்று மாலை அவரது தொகுதியில் அமைந்துள்ள தேர்தல் பிரச்சாரக் காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றில் கனடா உதயன் பிரதம ஆசிரியர் அவர்களுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஆர். என். லோகேந்திரலிங்கம் மற்றும் அவரது உதவியாளர் திரு சங்கர் சிவானந்தன் ஆகியோர் NDP கட்சியின் வேட்பாளர் Doly Begum அவர்களைச் சந்தித்தார்கள்.
அங்கு பிரதம ஆசிரியரின் பல கேள்விகளுக்கு மிகுந்த உற்சாகத்துடன் வேட்பாளர் Doly Begum பதிலளித்தார்.
ஒன்றாரியோ மாகாணத்தின் மாணவர்களின் பாடசாலைக் கல்வி தொடர்பாகவும் அவர்கள் பல்கலைக் கழகங்களுக்குச் புகுகின்றபோது போதிய அறிவைக் கொண்டவர்களாக விளங்க வேண்டும் என்றும் அதனால் விஞ்ஞானம் போன்ற பாடத்திட்டங்களில் பல மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளதாகவும் வேட்பாளர் Doly Begum தெரிவித்தார்.
ஒன்றாரியோ மாகாணத்தில் தங்கள் அரசு பதவியேற்றால் பாடசாலைக் கல்வித் திட்டம் தொடர்பாக எவ்வாறான முற்போக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளீர்கள் என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பிரதம ஆசிரியரின் மேலும் சில கேள்விகளுக்கும் வேட்பாளர் Doly Begum தகுந்த பதில்களை அளித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.