கடந்த 18ம்; திகதி உலகெங்கும் பல நாடுகளில் முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ‘நினைவுத் தீபம்’ ஏற்றும் நிகழ்வுகளும் கொடியேற்றும் நிகழ்வுகளும் அஞ்சலி உரைகளும் இடம்பெற்றன.
அந்த வரிசையில் கனடாவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பணிமனையில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் படுகொலைகள் ‘நினைவுத் தீபம்’ ஏற்றும் நிகழ்வில் பல அன்பர்கள் கலந்து கொண்டனர்.
இங்கே காணப்படும் படத்தில் நாடுகடந்த அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் நிமால் விநாயகமூர்த்தி அவர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் தீபம் ஏற்றிய பின்னர் மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதைக் காணலாம்.
செய்தியும் படமும்; சத்தியன்- கனடா