கனடா உதயன் பத்திரிகை ஆசிரியர் நண்பர் ஆர்.என். லோகேந்திரலிங்கம் அவர்களின் 50 ஆண்டு கால கலை, இலக்கிய, ஊடக, சமூக சேவையைப் பாராட்டியும், இம்மாதம் உதயன் இலங்கைச் சிறப்பிதழை வெளியிடும் (29-05-2022) தருணம் அறிந்தும் மகிழ்கின்றோம்.
கனடாவில் ஒரு வாரப்பத்திரிகையை 26 ஆண்டுகள் தொடர்ந்து நடத்துவது என்பது இலகுவான காரியமல்ல, ஆரம்பகாலத்தில் பத்திரிகையை அச்சேற்றுவதற்கான கணனி மென்பொருட்கள் போதிய அளவு இருக்கவில்லை. எனவே ஒரு செய்தியை முதலில் ரைப் செய்து பின்; அதை வெட்டி ஒட்டித்தான் பிரதிகள் எடுக்க வேண்டியிருந்தது. அவரது மனைவி இந்த அரிய பணியை அழகாகச் செய்வதை அன்று பலதடவைகள் கண்டு உள்ளேன். குடும்பத்தில் பூரண ஆதரவின்றி இந்த வெற்றி சாத்தியமாகாது, என்பது எனது அனுபவ உண்மை.
எனவே அவர்குடும்பத்தினர்க்கும் நண்பார்களுக்கும் எனது வாழ்த்துகள் உரித்தாகட்டும் அன்புடன் வெற்றிமணி மு.க.சு.சிவகுமாரன்.யேர்மனி.23.05.2022 படத்தில்: கவிஞர்.வி.கந்தவனம், உதயன் பிரதம ஆசிரியர்.நட்பின்நாயகன் ஆர்.என்.லோகேந்திரலிங்கம்.வெற்றிமணி ஆசிரியர் மு.க.சு.சிவகுமாரன்,கலைக்கதிர்.கதிர்.துரைசிங்கம் ஆகியோர்.