(மன்னார் நிருபர்)
(22-05-2022)
மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா வரையிலான கடற்கரை கரையோர பகுதி தூய்மையாக்கும் நடவடிக்கை இன்று ஞாயிற்றுக்கிழமை (22) காலை இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் தலைவர் வி.ஸ்.சிவகரன் தலைமையில் குறித்த தூய்மையாக்கல் நடவடிக்கை இடம் பெற்றது.
இதன் போது மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மற்றும் இளைஞர்கள்,யுவதிகள்,சிறுவர்கள் கலந்து கொண்டு தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து நடுக்குடா கடற்கரை வரையிலான கரையோரப்பகுதியில் சிரமதானம் இடம் பெற்றது.
-இதன் போது கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்கள்,உள்ளிட்ட கழிவுப்பொருட்கள் அப்பகுதியில் இருந்து அகற்றப்பட்டது.
அகற்றப்பட்ட கழிவுப்பொருட்கள் மன்னார் பிரதேச சபையின் உதவியுடன் அப்பகுதியில் இருந்து கொண்டு செல்லப்பட்ட மை குறிப்பிடத்தக்கது.