மன்னார் நிருபர்
23-05-2022
மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு தேவையான ஒரு தொகுதி மருத்துவ பொருட்களை மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தினர் இன்றைய தினம் திங்கட்கிழமை (23) காலை மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை களஞ்சியசாலையில் கையளித்துள்ளனர்.
மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் பணிப்பாளர் ஜாட்சன் பிகிராடோ இன்றைய தினம் மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதனிடம் அத்தியாவசிய மருத்துவ பொருட்களை கையளித்தார்.
-இதன் போது,2 ஆயிரம் குளுக்கோ மீற்றர் ஸ்ரிப்ஸ்,400 சத்திர சிகிச்சை மயக்க ஊசி மருந்துகள் உட்பட சுமார் 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பெறுமதியான மருந்துகள் வழங்கி வைக்கப்பட்டது.
-நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வைத்திய சாலைகளில் மருந்து பொருட்கள் உள்ளடங்களான வைத்திய உபகரணங்களுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஏற்பட்டுள்ள குறித்த மருந்து மற்றும் மருத்துவ பொருட்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் மன்னார் மெசிடோ நிறுவனத்திடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைவாக குறித்த மருத்துவ பொருட்கள் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது