(மன்னார் நிருபர்)
(23-05-2022)
கா.பொ.த சாதாரண பரீட்சை இன்று திங்கட்கிழமை(23) ஆரம்பமாகிய நிலையில் மன்னார் மாவட்டத்தில் சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்கள் இன்றைய தினம் காலை ஆர்வத்துடன் பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
-மன்னார் மற்றும் மடு கல்வி வலயங்களில் உள்ள மாணவர்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட பரீட்சை மண்டபங்களுக்கு சமூகமளித்து உள்ளனர்.
-இன்று காலை 8.30 மணிக்கு பரீட்சை ஆரம்பமாகியுள்ள நிலையில் மாணவர்கள் நேரத்துடன் சுகாதார வழி காட்டுதல்களுக்கு அமைவாக பரீட்சைக்கு தோற்றி உள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் சுமார் 31 பரீட்சை மையங்களில் 3642 பரீட்சாத்திகள் க .பொ .த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.