நேற்றைய தேர்தல் முடிவுகள் வெளியான சில மணிநேரங்களின் பின்னர் எதிர்பாராத அறிவிப்புக்களை இரண்டு எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் விடுத்தனர்.
ஒன்றாரியோ தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியாக விளங்கவுள்ள புதிய ஜனநாயகக் கட்சியின் தலைவி அன்றியா ஹார்வர்த் அவர்களும் படுதோல்வியைத் தழுவியுள்ள லிபரல் கட்சியின் தலைவர் ஸ்டீபன் டெல் டுக்கா ஆகியோர் தங்கள் தலைமைப் பதவியைத் துறந்துள்ளனர்