மன்னார் நிருபர்
(03-06-2022)
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள பெரியமடு கிராமத்தில் சமுர்த்தி உதவி திட்டத்தின் மூலமும் சுய உழைப்பின் மூலமாகவும் மேற்கொள்ளப்பட்டு வந்த பழ வகைகள் மற்றும் மரக்கறி வகைகள் இன்று (3) அறுவடை செய்யப்பட்டது.
மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் பழ வகைகளான பப்பாசி , பலாப்பழம் மற்றும் மரக்கறி வகைகளான கத்திரி, மிளகாய் போன்றவற்றின் அறுவடைகளை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது ஆறு மாதத்தில் பலன் தரக்கூடிய மரவள்ளி செடிகளும் நாட்டி வைக்கப்பட்டது.
மேலும் இந்த நிகழ்வில் மாவட்ட செயலகத்தின் திட்டமிடல் பணிப்பாளர், சமுர்த்தி உதவி ஆணையாளர், பிரதேச செயலாளர், கிராம சேவையாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்களும் கலந்து கொண்டனர்.