மன்னார் நிருபர்
(03-06-2022)
மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாற்றாற்றல் கொண்டவர்களுக்கான விளையாட்டு விழா இன்று (3) வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையில் நடை பெற்றது.
மன்னார் உதவி மாவட்ட செயலாளர் சிவராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பிரதேச செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
மன்னார் , நானாட்டான் , முசலி, மடு, மாந்தை மேற்கு ஆகிய:5 பிரதேச செயலக பிரிவுகளில் வசிக்கும் மாற்றாற்றல் கொண்டோர் விளையாட்டு போட்டிகளில் பங்கு பற்றினர்.
இதன் போது இடம் பெற்ற விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி வெற்ற வீரர்களுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் தேசிய மட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர்களும் கௌரவிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது.