மன்னார் நிருபர்
07-06-2022
பொது போக்குவரத்தில் மாற்றாற்றல் உடையவர்களுக்கான ஆசன ஒதுக்கீட்டை உறுதி படுத்த கோரி விழுது அமைப்பின் அனுசரணையில் தேனீ மாற்றாற்றல் அமைப்பினரால் விசேட விழிப்புணர்வு நிகழ்வு மன்னார் பிரதான பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (7) காலை இடம்பெற்றது.
இதன் போது அரச மற்றும் தனியார் போக்குவரத்து பேருந்துகளில் மாற்றாற்றல் உடையவர்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் பிரத்தியோக ஸ்ரிக்கர்கள் ஒட்டப்பட்டது டன் மாற்றாற்றல் உடையவர்களுக்காக ஒதுக்கப்பட்ட ஆசனங்கள் அடையாளப்படுத்தப்பட்டது
குறித்த நிகழ்வில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஸ்ரான்லி டிமேல், விழுது அமைப்பின் மாவட்ட இணைப்பாளர்,தேனீ அமைப்பின் உறுப்பினர்கள்,சமூக செயற்பாட்டாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபட்டதுடன் ஸ்ரிக்கர்களையும் காட்சிப் படுத்தியமை குறிப்பிடத்தக்கது.