(மன்னார் நிருபர்)
(08-06-2022)
உலக சமுத்திர தினத்தை சிறப்பிக்கும் முகமாக கடல் வளங்களை பாதுகாக்கும் கருப்பொருளுக்கு அமைய மன்னார் தோட்டவெளி கடற்கரை பகுதியில் தூய்மைப் படுத்தும் நிகழ்வு இன்று புதன்கிழமை (8) காலை இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்கமைப்பில் இடம் பெற்ற கடற்கரை தூய்மையாக்கல் நிகழ்வில் அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டு தூய்மையாக்கல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபையினால் கடல் சூழல் பாதிப்பு மற்றும் கடல் வள முகாமைத்துவம் பற்றிய விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கபட்டமை குறிப்பிடத்தக்கது.