ஒராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் சாந்தா பஞ்சலிங்கம் தெரிவிப்பு
“எம் மத்தியில் பல ஆளுமைகள்க நிறைந்தவராகவும் சமூகப்பற்றும் அனுபவப் பகிர்விற்கு முன்னுரிமை வழங்கி செயற்பட்டவருமான கலாநிதி வசந்தகுமார் கனடிய தமிழர் சமூகத்தின் ஒரு விசேட அடையாளமாகத் திகழ்ந்தவர். அவருடைய இழப்பினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்புவதற்கு எமது சமூகம் நீண்ட போராட்டம் ஒன்றை நடத்த வேண்டியிருக்கும்’’
இவ்வாறுரூபவ் கனடாவில் பல ஆண்டு காலம் வாழ்ந்த வண்ணம் பல்வேறு துறைகளில் பிரகாசித்தவராக விளங்கியவரும் பொறியியலாளரும் ‘கொம்பியுரெக்’ (Computek.) தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் ஸ்தாபகரும் கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் நீண்ட கால ஆலோசகராக விளங்கியவருமான கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்களின் ஓராண்டு நினைவஞ்சலி நிகழ்வில் அஞ்சலி உரையாற்றிய கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் வர்த்தகப் பிரமுகருமான சாந்தா பஞ்சலிங்கம் தெரிவித்தார்.
கனடிய தமிழர் வர்த்தக சம்மேளனத்தின் முன்னாள் தலைவர் திரு கென் கிருபா மற்றும் தற்போதைய உப- தலைவர் திரு அரிகரன் ஆகியோர் தொகுத்து வழங்கிய இந்த அஞ்சலி நிகழ்வில் பலர் உரையாற்றினர். அனைவரது உரைகளும் கலாநிதி வசந்தகுமார் அவர்களின் ஆளுமைகளைப் பறைசாற்றியவையாகவும் அவரது இழப்பு தமிழ்ச் சமூகத்திற்கு பாரிய நஸ்டத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை எடுத்துச் சொல்லுகின்றவையாகவே இருந்தன என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கனடா உதயன் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கம் அங்கு அஞ்சலியுரையாற்றுகையில். ஆமரராகி விட்ட கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்கள் வர்த்தகம் தொழில்நுட்பம் தலைமைத்துவம் ஆகிய துறைகளில் மட்டுமல்ல தமிழ்க் கலைகள் தமிழரின் பண்பாடு ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்தியது மட்டுமல்லாது தனது பிள்ளைகளுக்கும் தமிழ் மொழி மீது பற்றையும் ஆர்வத்தையும் ஏற்படுத்த அரும்பாடு பட்டார். இதன் காரணமாகவே அவர் ஒட்டு மொத்த தமிழ்ச் சமூகமும் நன்கு அறிந்த ஓருவராக விளங்கினார் என்றார்.
இறதியில் கலாநிதி தாம் வசந்தகுமார் அவர்களின் புதல்வர் கலாநிதி சேரன் அவர்கள் பதிலுரையாற்றினார். இங்கே காணப்படும் படங்கள் அங்கு எடுக்கப்பெற்றவையாகும்.