தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் பசுமை அறிவொளி நிகழ்ச்சி நேற்று ஞாயிறுக்கிழமை [09-06-2022]தெல்லிப்பளை கொல்லங்கலட்டியில் நடைபெற்றுள்ளது .தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் மாணவர்களிடையே சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களை சூழல் பாதுகாப்பில்
ஈடுபடுத்தும் நோக்கோடும் அவர்களின் கல்வி வளர்ச்சி மற்றும் ஆளுமை விருத்தியை மேம்படுத்தும் நோக்கோடும் கிராமங்கள் தோறும் பசுமை அறிவொளி நிகழ்ச்சித் திட்டத்தை முன்னெடுத்து வருகின்றது. இதன் தொடர்ச்சியாகவே கொல்லங்கலட்டியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.
பா.நவநேசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சில் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ .ஐங்கரநேசன் , சி.சிவகஜன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார்கள்.
அதிக எண்ணிக்கையான மாணவர்களும் பெற்றோர்களும் பங்கேற்ற இந்நிகழ்ச்சியின் முடிவில் மாணவர்கள் அனைவருக்கும் மரநடுகை மேற்கோள்கள் அடங்கிய அப்பியாசக்கொப்பிகள் வழங்கப்பட்டன. இவ்வப்பியாசக்கொப்பிகள் ரொறன்ரோவின் மனித நேயக்குரல் என்னும் அமைப்பின் அனுசரணையுடன் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.