கனடா- ஸ்காபுறோ நகரில் 3021 மார்க்கம் வீதி யுனிட் இலக்கங்கள் 45. 46. 47 ஆகியவற்றில் அமைந்துள்ள – ஶ்ரீ ஆதிபராசக்தி அம்பாள் தேவஸ்த்தானத்தின் ஶ்ரீ கனகதுர்க்கை பிரம்மோற்சவம் தற்போது மிகவும் பக்தி பூர்வமாக இடம்பெற்றுவருகின்றது
கடந்த 04-06-2022 சனிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஶ்ரீ கனகதுர்க்கை பிரம்மோற்சவத்தின் 8ம நாள் திருவிழா நேற்று சனிக்கிழமை நடைபெற்றது.
ஆலயத்தின் பிரதம குருவும் ஸ்தாபகருமான ப்ரம்மஶ்ரீ ஜம்பநாத சந்திரமௌலி சாஸ்த்திரிகளின் நல்லாசியு;டன் மஹோற்சவத்தின் பிரதம குரு சிவஶ்ரீ சுரேந்திர சிவாச்சாரியார்( சுரேன் ஐயா) ஆகியோர் தலைமையில் ஏனைய சிவாச்சாரியப் பெருமக்கள் சகிதம் அனைத்து பூஐச அபிஷேகங்கள் ஆகியன இனிதே நடைபெற்றன. தொடர்ந்து உள்வீதி வழியாகவும் பின்னர் வெளிவீதி வழியாகவும் அம்பாள் விீதி வலம் வந்த காட்சிகள் பக்தர்களைப் பரவசப்படுத்தின..
ஒதுவார் ஞானச்செல்வம் உட்பட சில தொண்டர்கள் தேவாரம் மற்றும் பஞ்ச புராணம் உட்பட பக்தி கீதங்களை இனிதாகப் பாடி பக்தர்களை மகிழ்வித்தார்கள்.
இங்கு காணப்பெறும் படங்கள் நேற்றைய 8ம் இரவுத் திருவிழாவின்போது எடுக்கப்பெற்றவையாகும்
ஆலயத்தின் தொலைபேசி இலக்கம்; 416 293 1226
மின்னஞ்சல்; sakthi1226@gmail.com