தமிழ்நாட்டிலிருந்து கனடாவிற்கு வருகை தரும் பல துறை சார்ந்த அறிஞர்கள் பேச்சாளப் பெருமக்கள் மற்றும் கல்வியாளர் அரசியல் தலைவர்கள் என பலரும் எமது கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்துடன் தொடர்புகளை மேற்கொண்டு நட்புக் கொள்ளும் வழக்கம் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக இடம்பெற்று வரும் ஒன்றாகும்.
அந்த வகையில் அண்மையில் கனடாவிற்கு வருகை தந்துள்ள Detective international நிறுவனத்தின் அதிபரும் Detective Director General வுமாகிய V. Kulothunga Cholan அவர்கள் எமது கனடா உதயன் பத்திரிகை நிறுவனத்துடன் தொடர்பை மேற்கொண்டு தனது வுருகை பற்றியும் இந்தியாவிலும் பல உலக நாடுகளிலும் தான் ஆற்றிவரும் பணிகள் தொடர்பாக விளக்கமளித்தார்.
எனவே அவரை கனடா உதயன் பத்திரிகைக்காகவும் ‘ரூபம்’ இணைய வானொலி மற்றும் இணைய வழி தொலைக்ககாட்சிக்காகவும் நேர்காணல் செய்வதற்காக BURLINGTON நகரத்தில் உள்ள அவரது புதல்வர் கார்த்திக் அவர்களின் இல்லத்திற்கு ஒரு குழுவாக பயணித்தோம்.
எமது குழுவின் ‘உதயன்’ பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அவர்களும் ரூபம்’ இணைய வானொலி மற்றும் இணைய வழி தொலைக்ககாட்சி நிலையங்களின் நிறுவனர் ராம் சங்கர் சிவநாதன் மற்றும் அவரது உதவியாளர்கள். அத்துடன் வர்த்தகப் பிரமுகர் ரஜீவ் செபராசா அவர்கள் சமூக சேவையாளர் விசு கணபதிப்பிள்ளை அவர்கள் ஆகியோர் சென்றிருந்தோம்.
V. Kulothunga Cholan அவர்களின் புதல்வரான கார்த்திக் அவர்களின் இல்லத்தில் திருமதி குலோத்துங்க சோழன் மற்றும் மக்கள் மருமக்கள் ஆகியோர் எம்மை வரவேற்றனர்.
தொடர்ந்து சில மணிநேரங்கள் உரையாடி கருத்துக்களைப் பகிர்ந்து கொண்ட பின்னர் அவரை கனடா உதயன் பத்திரிகைக்காகவும் ‘ரூபம்’ இணைய வானொலி மற்றும் இணைய வழி தொலைக்ககாட்சிக்காகவும் நேர்காணல் செய்து பதிவு செய்து கொண்டோம்.
மேற்படி நேர்காணலுக்ககான சந்திப்பின் போது. அவருடன் பல விடயங்ககளை கேட்டறிந்து கொண்டோம்.
ஒரு தனியான புலனாய்வாளர் என்றவகையில் (Detective.) என்ற வகையில் அவரது பணிகளில் அவர் இதுவரை சந்தித்த சவால்கள் வெற்றிகள் மற்றும் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் மற்றும் முன்னாள் பாரதப் பிரதமர்கள் ஆகியோருக்காக தாமும தமது நிறுவனமும் ஆற்றிய பணிகள் பற்றிய விபரங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் மற்றும் கல்லுர்ரிகள் ஆகியவைக்கு தாமும் தமது புலனாய்வு நிறுவனமும் ஆற்றிய பணிகள் தொடர்பாகவும் பதிலளிக்கும் போது எம்முடன் பகிர்ந்து கொண்டார்.
இந்த விபரங்கள் அடங்கிய நேர்காணல்களை ‘கனடாஉதயன்’ பத்திரிகையிலும் ரூபம்’ இணைய வானொலி மற்றும் இணைய வழி தொலைக்ககாட்சி ஆகியவற்றிலும் பார்த்தும் கேட்டும் மகிழலாம்.
கனடா உதயன் ஆசிரிய பீடம்