மன்னார் நிருபர்
15-06-2022
மன்னார் மாவட்டத்தின் கீழ் உள்ள பாடசாலைகளுக்கான 2022 ஆம் ஆண்டுக்கான வலய மட்ட மெய்வல்லுனர் திறனாய்வுப் போட்டி
மன்/முருங்கன் மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற நிலையில் மன்/உயிர்த்தராசன்குளம். றோ.க.த.க.பாடசாலை மாணவர்கள் இருவர் இரண்டாம் இடத்தை பெற்று மாகாண மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
குறித்த வலய மட்ட மெய்வல்லுனர் போட்டியில் 14 மற்றும்16 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவு,உயரம் பாய்தல் போட்டியில் மன்/உயிர்த்தராசன்குளம். றோ.க.த.க.பாடசாலை மாணவர்கள் .A.ஆகாஷ்,S.விஜய் ஆகியோர் 2ம் இடத்தை பெற்று மாகாண மட்ட மெய்வல்லுனர் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.
.நீண்ட காலத்திற்கு பின்னர் மன்/உயிர்த்தராசன்குளம் றோ.க.த.க.பாடசாலையில் இருந்து மாகாணமட்ட போட்டிக்கு இரு மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.