(17-06-2022)
வத்தளை கதிரான பாலத்திற்கு அருகில் தாயொருவரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனை தேடும் நடவடிக்கையில் பொலிஸார் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றனர்.
பொலிஸார், கடற்படையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
மாற்றுத் திறனாளியான சிறுவனின் தாய் கடந்த புதன்கிழமை(15) இரவு சிறுவனை களனி ஆற்றில் வீசி விட்டு தானும் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற போது, அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றியுள்ளனர். எனினும் சிறுவனை காப்பாற்ற முடியவில்லை.
குறித்த தாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக மேற்படி தாயின் மூத்த மகன் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
´”புதன்கிழமை மாலை 5.20 மணியளவில் வீட்டில் இருந்து வெளியேறினார்.
எங்கே போகிறீர்கள் என கேட்டேன். எதுவும் பேசவில்லை. தம்பியை மட்டும் அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
அம்மாவிற்கு வலிப்பு நோய் உள்ளது. அம்மா என்னை விட தம்பி மீதுதான் அதிகமாக பாசம் காட்டுவார். அப்படியிருக்கையில் ஏன் இவ்வாறு செய்தார் என்று தெரியவில்லை. என தெரிவித்துள்ளார்.