இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராடி வரும் ‘கோட்டா கோ கம்’ அணியின் உறுப்பினர் வட பகுதிக்கு விஜயம் செய்து மக்கள் குறைகளை கேட்டறிவதில் ஆர்வம் காட்டி வருவதாக எமது செய்தியாளர் அறிவித்துள்ளார். அத்துடன் வட பகுதியில் நீண்ட காலமாக தமது உறவுகளைத் தேடி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணமற்போனவர்களின் உறவினர்களைச் சந்தித்தம் அவர்கள் உரையாடியுள்ளனர்.
இந்த வகையில்ர்கிளிநொச்சி பிரதேச தமிழ் மாணவர்களுக்கு ஒரு தொகை அப்பியாசப் புத்தகங்களையும் அன்பளிப்புச் செய்துள்ளனர். போராட்டக்காரர்களின் வடக்கு விஜயத்தின் ஒரு அங்கமாக புத்தகங்களை அன்பளிப்புச் செய்துள்ளனர். இந்த சந்திப்புக்கள் கடந்த வாரம் இடம்பெற்றன.
கோட்டா கோ கம நூலகத்தில் அன்பளிப்புச் செய்யப்பட்ட அப்பியாசப் புத்தகங்களில் ஒரு தொகைப் புத்தகங்கள் இதன்போது கிளிநொச்சி ஸ்கந்த புரம் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளன என அறியப்படுகின்றது
அத்துடன் பிரதேச தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்தும் போராட்டக்களத்தின் தென்னிலங்கை இளைஞர்கள் தகவல்களை கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.தென்னிலங்கை சிங்கள மற்றும் வடக்கு தமிழ் மக்கள் இடையே பலமான நேசப்பாலமொன்றை கட்டியெழுப்பி நாட்டின் நலன் கருதிய போராட்டத்தில் இருதரப்பும் இணைந்து செயற்படுவதற்கான வழியேற்படுத்துவதே இந்த விஜயத்தின் நோக்கம் என்று கோட்டா கோ கம போராட்டக்கள ஒருங்கிணைப்பாளர்கள் கிளிநொச்சியிலும் யாழ்ப்பாணத்திலும் தெரிவித்துள்ளனர். அத்துடன் யாழ்ப்பாண பல்கலைக் கழகமாணவர்களின் பிரதிநிதிகளையும் கோட்டா கோ கம்’ அணியின் உறுப்பினர்ள் சந்தித்து உரையாடினர்.