வி.தேவராஜ்
மூத்த ஊடகவியலாளர்
‘இலங்கையின் பொருளாதாரம் முழுமையான வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது‘ என்பது பரமரகசியமல்ல. 69 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கோதாபய ராஜபக்ஷவும் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருமான்மையைப் பெற்ற ராஜபக்ஷக்களும் அவர்களுடன் இணைந்த ஆளும் வர்க்கத்தினரும் ‘தோற்றுப் போன அரசை‘ – ‘குயடைநன ளுவயவந‘ – ஆணை வழங்கிய மக்களுக்கு பரிசாக வழங்கியுள்ளனர்.
‘தோற்றுப் போன அரசை‘ வழங்கிய நிலையிலும் ‘மக்கள் ஆணையை கேடயமாக்கி‘ தொடர்ந்தும் ஆட்சியில் அமர்ந்துள்ளனர்.
இடைக் கால சர்வ கட்சி அரசாங்கத்திற்குப் பதிலாக அரசியலில் முகவரியற்றிருக்கின்ற ரணில் விக்ரமசிங்கவை பிரதம மந்திரியாக்கி ‘பொம்மலாட்ட அரசியலை‘ ராஜபக்ஷக்கள் நடத்திக் கொண்டிருக்கின்றனர். மொத்தத்தில் மக்களின் நம்பிக்கையை இழந்தவர்கள் அரசியலை நடத்துகின்றனர் என்று கூறுவதே பொருந்தும்.
தென்னிலங்கை மக்களுக்கு வேறு தெரிவு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. தற்போது இருக்கும் தலைமைகளே மீண்டும் மேலெழும்ப முயற்சிக்கின்றன.
இந்தத் தலைமைகள் ராஜபக்ஷக்களுக்கு பதிலீடாகப் பார்க்கப்படுகின்றனவேயொழிய சரியான பாதையில் நாட்டை இட்டுச் செல்பவர்களாக இல்லை.
இன்றைய நெருக்கடிகள் என்பது ‘சுதந்திர இலங்கையின் சிங்கள பௌத்த தேசிய அரசியல்வாதிகளினால்‘ உருவாக்கப்பட்டவை.
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட அரசு: அரச இயந்திரம்: அரசியல்வாதிகள் என அனைத்துமே தமிழர்களை அழிக்கவே வடிவமைக்கப்பட்டுள்ளன.
இதன் விளைவு சகல துறைகளிலும் சிங்கள இனத்தின் போஷpப்பவர்களாக மாறினர்.
இன்றைய நெருக்கடிகளுக்கு ராஜபக்ஷக்களும் அவர்கள் சார்ந்தவாகளினதும் ஊழல் மோசடிகள் கொள்ளைகள் ஓரங்கமாக இருந்த போதும் அதிகாரப் பகிர்வில் தமிழ் மக்களுடன் எந்தவிதத்திலும் சமரசத்திற்கு வரமறுத்ததன் நிலைப்பாடும் காரணமான அமைந்தது. தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்ட இனக் கலவரங்கள் சொத்தழிவுகள் பிரகடனப்படுத்தப்பட்ட போர் என்பன தமிழ் மக்களை மாத்திரம் தின்று தீர்க்கவில்லை இலங்கையின் பொருளாதாரத்தையும் இரையாக்கிக் கொண்டது.
ஆனால் இன்றும் இனவாதம் பேசும் அரசியல்வாதிகள் நீதிமன்ற தீர்ப்புக்கள் சிங்கள மக்களால் மீறப்படலாம் என்றும் தெரிவிக்கின்றனர்.
எனவே தென்னிலங்கை எதிர்பார்க்கின்ற அரசியல் மாற்றங்கள் தற்போதைய ஆளும் வர்க்கத்திற்கு சார்பானதாக சற்று முன்னேற்றகரமானதாக அமையும் என்பதைத் தவிற பெரிதாக எதிர் பார்ப்பதற்கு ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
ஒரு இனக் கலவரம் ஒன்றுக்கு அடித்தளமிடுவதற்கான முஸ்தீபுகளும் தென்னிலங்கை அரசியலில் காணக் கூடியதாக இருப்பதை மறுப்பதற்கில்லை.
குருந்து மலை விவகாரம் நீதிமன்ற தீர்ப்பையும் மீறி நடத்தப்படுவதன் நோக்கம் அதுவாகவேத் தெரிகின்றது. குறிப்பாகக் கூறுவதாயின் மீண்டும் இனவாதத்தைக் கையில் எடுத்து அரசியலில் ராஜபக்ஷக்களும் அவர்களின் அணி சார்ந்தோரும் தம்மை நிலை நிறுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.
மறுபுறம் புலம் பெயர் தமிழர்களின் டொலர்களை இலங்கையின் பொருளாதாரத்தின் மீட்சிக்காக கையேந்தும் நிலையிலும் தமிழர் விவகாரத்திற்கான தீர்வு குறித்து கிஞ்சித்தேனும் கரிசனை கொள்ளும் நிலையில் தென்னிலங்கை அரசியல் தலைமைகளோ மக்களோ இல்லை. தமிழர் விவகாரத்தை தென்னிலங்கை அரசியலில் பேசு பொருளாக்க எந்த சக்தியும் முன்வரத் தயாராக இல்லை. ஆனால் இன்றைய நெருக்கடிகள் குறித்து நிறையவே பேசப்படுகின்றன.
உணவு நெருக்கடியானது எதிர்காலத்தில் 4 மில்லியன் முதல் 5 மில்லியன் இலங்கையர்களை நேரடியாகப் பாதிக்கக் கூடும் என்றாலும்இ அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
– எரிபொருள் மற்றும் பால் விலை இரண்டும் சுமார் 400மூ அதிகரித்துள்ளது
– நேர்மை சுயநலமின்மை மற்றும் சட்டத்தை மதிக்கும் அரசியல்வாதிகள் ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட அரசியல் கலாச்சாரம் கட்டியெழுப்புவதற்கான அடித்தளமாக இலங்கைக்கு அரசியல் இருக்க வேண்டும்
– மத்திய வங்கியின் கூற்றுப்படி பணவீக்கம் 33 வீதம் ஆகவும் உணவுப் பணவீக்கம் 45 வீதத்துக்கும் அதிகமாகவும் உள்ளது.
– அடுத்த சில மாதங்களில் மக்கள் உயிர்வாழ முடியாமல் போகும் அபாயம் உள்ளது.
– எரிபொருள் மற்றும் பால் விலை இரண்டும் சுமார் 400 வீதம் அதிகரித்துள்ளது.
– பொருளாதார மறுமலர்ச்சிக்கு அரசியல் ஸ்திரத்தன்மை முக்கியம்.அது இன்னும் இலங்கையில் தோற்றுவிக்கப்படவில்லை.;
– இந் நிலையில் தோற்றுப்போன அரசை வைத்துக் கொண்டு மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களால் நாட்டை மீட்டெடுக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
– சாதாரண உடை தரித்த படைத்தரப்பினர் மற்றும் புலனாய்வுhளர்களின் அதிகரித்த பிரசன்னம் காரணமாக ‘கோதா கோ கம‘ நோக்கிய பொது மக்களின் நகர்வுகள் குறைவடைந்திருந்தது.; தீர்வின்றி தொடரும் பிரச்சனைகளால் மக்கள் மீண்டும் ‘கோதா கோ கம‘ நோக்கி படையெடுக்கத் தொடங்கிவிட்டனர். இது தென்னிலங்கை அரசியல் களம் மீண்டும் சூடு பிடிக்கத் தொடங்கிவிட்டதையேக் காட்டுகின்றது. இது ஆட்சியாளர்களை மீண்டும் கிலி கொள்ள வைத்துள்ளதுடன் குருந்து மலை விவகாரம் மற்றும் தமிழர் பகுதிகளில் காணி அபகரிப்பு என தென்னிலங்கையின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கின்றனர்.
– மொத்தத்தில் இலங்கைக்கு இப்போதைக்கு மீட்சி இல்லை.
Email : vathevaraj@gmail.com