கனடா உதயன் பத்திரிகையின் ‘இலங்கைச் சிறப்பிதழ் பிரதிகள் தற்போத உலகெங்கும் உள்ள கலை இலக்கிய ஆர்வலர்களின் கரங்களில் உதயன் எழுத்தாளர்களால் கையளிக்கப்படுகின்றன.
இந்த வகையில் மேற்படி இதழின் பிரதி ஒன்றை தற்போது சென்னையில் தங்கியுள்ள கனடா எழுத்தாளர் வீணைமைந்தன் சென்னை மணிமேகலைப் பிரசுர அதிபர் ரவி தமிழ்வாணனுக்கு வழங்கினார்.
சென்னையில் எழுத்தாளர் வீணைமைந்தன் அவர்கள் கனடா உதயன் பத்திரிகையில் தொடராக எழுதிய கட்டுரைகளை நூலாகத் தொகுக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது