நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட ஒன்றாரியோ மாகாண கொன்சர்வேர்ட்டிவ் அரசாங்கமானது டக் போர்ட் தலைமையில் அதிக பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வந்த கடந்த ஜூன் 2 தேர்தலில் தமது என்டிபி கட்சியானது ஒன்பது இடங்களை இழந்தது ஏன் என்பதை கட்சியின் முக்கிய தலைவர் ஆழ்ந்து நோக்க வேண்டும் என ஆண்ட்ரியா ஹோர்வத் தெரிவித்துள்ளார். தலைமைப் பதவியிலிருந்து வெளியேறும் அவர். எவ்வளவு காலத்திற்கு மாகாண சபை உறுப்பினராக பதவி வகிப்பேன் என்பதை தமது வானொலி பேட்டியொன்றில் தெரிவிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
தேர்தல் நடைபெற்று மூன்று வாரங்களுக்குப் பிறகு, அவரது ஒன்றாரியோ மாகாண புதிய ஜனநாயகக் கட்சியினர் 2018 இல் 40 இடங்களிலிருந்து 31 இடங்களுக்கு கீழே தள்ளப்பட்டனர். இதன் மூலம் கட்சி 9 ஆசனங்களை இழந்தது. என்ற கவலையை அன்றியா அவர்கள் வானொலி பேட்டியில் பகிர்ந்து கொண்டார். ஆனால் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சியாக இருக்க போதுமான தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் ஒன்றாரியோ என்டிபி கட்சிக்கு உள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
“என்னுடன் இருந்த தலைமைத்துவப் பொறுப்பு இன்றுடன் முடிவடைகிறது,” என்று கடந்த புதன்கிழமை அன்றியா ஹாவர்த் கூறினார்”எங்கள் மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒரு சிறந்த குழு உள்ளது, அது அவ்வளவு வலிமையானது அல்ல, இது எனக்கு மிகவும் கவலையளிக்கின்றது,” என்று அவர் கனடாவின் சிபிசி வானொலியின் மெட்ரோ மார்னிங்கில் என்னும் எட்டு நிமிட பேட்டி நிகழ்ச்சியில் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்றியா ஹார்வத் அவர்கள் தனது தொகுதியில் வெற்றி பெற்றாலும் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பெற்ற அந்த இரவன்று தான் கட்சியின் தலைமைப் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்,
மெட்ரோ மார்னிங் நிகழ்ச்சியின் தொகுப்பாளர் இஸ்மாயிலா ஆல்ஃபாவிடம் ஹார்வத் பின்வருமாறு கூறினார். “மக்களுக்கு போதுமான இடையூறுகள் இருந்தன, அவர்கள் அன்றாட வாழ்க்கையில் அவர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து நின்று பார்க்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். மேலும் மாற்றத்தைக் காண வேண்டும் என்ற எண்ணம் பெரும்பாலான வாக்காளர்களிடம் இருக்கவில்லை.
எனினும் எமது என்டிபி கட்சி எடுத்த தீவிர முயற்சியானது டக் போர்டின் சவாலை சிறப்பாகச் சந்தித்தது வெற்றி கொண்டிருக்கலாம் என்று அவர் உறுதியாகக் கூறினார்.
கடந்த நான்கு ஒன்றாரியோ மாகாணத் தேர்தல்கள் மூலம் 13 ஆண்டுகள் தலைவராக பணியாற்றிய அன்றியா ஹோர்வத், “எங்கள் பிரச்சாரம் எவ்வாறு செயல்பட்டது என்பதன் அடிப்படையில் நாம் பார்க்க வேண்டிய மற்ற விஷயங்கள் உள்ளன. “தரையில் என்ன நடக்கிறது, மக்கள் களத்தில் நடக்கும் பிரச்சாரத்தைப் பற்றி எப்படி உணருகிறார்கள் என்பதைத் திரும்பக் கேட்க நான் காத்திருக்கிறேன், ஏனென்றால் அங்குதான் வெற்றி அல்லது தோல்வி. பற்றிய காரணங்களை நாம் அறிந்து கொள்ளலாம்” என்றார் …