அனைத்துலக மருத்துவ நல அமைப்பு-IMHO USA மற்றும் இரட்ணம் பவுண்டேசன் ( RATNAM FOUNDATION ) அமைப்பினரது நிதி அனுசரணையில் தென்மராட்சி கல்வி வலயத்தில் இயங்கும் 10 பாடசாலைகளைச் சேர்ந்த 45 ஆரம்ப மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கான திறன் பலகை பயன்பாடு தொடர்பான பயிற்சிநெறி யூன் மாதம் 11,12 ஆம் திகதிகளில் முதல் கட்டமாக தென்மராட்சி வலய கணனி வள நிலையத்தில் நடைபெற்றது.
இப்பயிற்சி நெறி இசுருபாய கல்வி அமைச்சின் ஈ- தக்சலாவ மற்றும் வடமராட்சி வலய கணனி வள நிலைய வளவாளர்களினால் நடாத்தப்பட்டது.
இப்பயிற்சியின் இரண்டாம் நாளில் குறித்த அதிபர்களுடன் திறன் பலகை பாவனை பற்றியும் வலய கல்வி அலுவலக மேற்பார்வை நடைமுறைகள் பற்றியும் கலந்துரையாடப்பட்டு ஆசிரியர்களுக்கான விரலிகளும் பெயர் பலகைகளும் வழங்கப்பட்டன.
இதில் வலயக் கல்வி பணிப்பாளர் திரு.கிருபாகரன் அவர்களும் கலந்து கருத்துக்களை வழங்கியிருந்தார்.
இப்பயிற்சி அனைத்துலக மருத்துவ நல அமைப்பின்- IMHO USA இலங்கைக்கான வதிவிடப்பணிப்பாளர் திரு. கிருஷ்ணகுமார் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டது.
இப்பயிற்சி நெறியின் இரண்டாம் கட்டம் ஆசிரியர்களுகளினது வேண்டுகோளுக்கமைய மூன்று வாரங்களில் நடைபெறவுள்ளது.
தென்மராட்சி கல்வி வலயத்திற்கு வழங்கப்பட 10 பாடசாலைகளுக்கான திறன் பலகை கொள்வனவுக்கான நிதியில் 50% அனைத்துலக தென்மராட்சி அமைப்பினரால் வழங்கப்பட்டிருந்தது .