(மன்னார் நிருபர்)
(24-06-2022)
மன்னார் நகர பகுதியில் பல மாதங்களின் பின்னர் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(24) காலை லாப் எரிவாயு மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு உள்ளது.
-மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு அருகில் உள்ள லாப் எரிவாயு முகவர் ஊடாக வினியோகிக்கப்பட்டது.
-ஒரு தொகுதி 12.5 கிலோ மற்றும் 5 கிலோ நிறை உடைய லாப் எரிவாயு இவ்வாறு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.
நீண்ட காலமாக மன்னாரில் லாப் எரிவாயு விநியோகிக்க படாமையினால் பாவனையாளர்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்த நிலையில் இன்றைய தினம் மக்களுக்கு விநியோகிக்கப் பட்டுள்ளது.