“குரு பிரம்மா, குரு விஷ்ணு, குருதேவா மகேஸ்வரகா
குரு சாட்சா பரப்பிரம்மம் தஸ்மயி ஸ்ரீகுருவே நமக”.
சற்குரு சரவணபாபா சுவாமி விரைவில் கனடா வரவிருக்கிறார் என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகின்றோம். கனடாவுக்கு சுவாமி புதியவர் அல்ல. 2015 முதல் இன்று வரை 8 முறை எம்மைத் தேடி, எமக்கு ஆசி வழங்குவதற்காக கனடா வந்துள்ளார். சிவகுமாரனே அருட்குமாரனாக அவதரித்துள்ளார் என யாவராலும் போற்றப்படுபவர் எங்கள் சுவாமி. சிறுவயதிலேயே உலகியலில் இருந்து விடுதலையாகி குருவடிவம் தாங்கினார். இன்று அனைத்துக் கண்டங்களிலும் கால்பதித்து தனது புனிதப்பணியை மேற்கொண்டு வருகிறார். இவர் தன்னை வருத்தி எம்மை வாழ வைக்கும் மகான். பெற்ற தாய் போல எம்மை மன்னிக்கும் மனம் கொண்டவர்.
இவரது நிபந்தனையற்ற அன்பு, நட்பை வளர்த்தது. அவர் தரும் ஆலோசனைகளும், (சற்சங்கம்) போதனைகளும் நல்லாசிரியனாய் நின்று எம்மை வழிநடத்தின. அவரது புன்சிரிப்பும், பண்பும் அவரை தெய்வமாகவே காட்டின. தனக்கென்று எதையும் தேட மாட்டார். உலகிலுள்ள எல்லா ஜீவராசிகளையும் சமமாக மதித்து நடப்பார். உலகில் அமைதியும், உடல் ஆரோக்கியமும், உள்ளத்துக்கு ஆனந்தமும் அனுக்கிரகமாக வேண்டுமென்று பிரார்த்தனை செய்வார். ஷசர்வ யோகா சமஸ்தா சுகினோ பவந்து| என்று வேண்டுதல் செய்யும்படி எம்மையும் ஊக்குவிப்பார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ணபுரம், பாலக்காடு என்ற இடத்திலும், கலிகட்டில் உள்ள மயிலாடுகுன்னு என்ற மலையிலும், லண்டனில் பார்நெற் என்ற இடத்திலும் கோவில்கள் அமைத்து மனித குலத்திற்கு அன்பையும் புரிந்துணர்வையும் வழிகாட்டி வருகிறார்.
ஆன்ம ரூடவ்டேற்றம் பெறுவதற்கும் எமது கர்மாக்களை களைவதற்கும் குருவின் துணை அவசியம். பக்தி மார்க்கத்திலிருந்து எம்மை ஞானமார்க்கத்துக்குக் கொண்டு செல்லும் வல்லமை குருவுக்கு மட்டுமே உண்டு. ஷகுரு தான் எமக்கு எல்லாம்| என சங்கல்ப்பம் செய்து அதற்கான மனப்பக்குவத்தை அடைந்தால் குருவின் ஆசியும் பேரின்பமும் கிட்டும்.
சுவாமியை தரிசிப்பதால் உண்டாகும் அனுபவம் சுவாமிக்கும் சுற்றத்தாருக்கும் சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும். ஆர்வம் சாதனைக்கு வித்தாகும். சாதனை மூலம் உண்மையை உணர்தல் சாத்தியமாகும். இதுவே பக்தி மார்க்கமாகும். நல்லதை நினைப்பதும், நல்லதைச் செய்வதும், மானசசாதனை. மந்திரங்களையும், சுலோகங்களையும் பாராயணம் பண்ணுதல் மந்திர சாதனை. தானம் செய்வது கர்ம சாதனை. இவற்றைவிட அன்னதானம், வித்தியாதானம், வஸ்திரதானம் என பல உண்டு. இந்த பக்தி மார்க்கத்தில் உள்ளவரை ஞானமார்க்கத்துக்கு இட்டுச் செல்ல குருவால் மட்டுமே முடியும். ஷகுரு இல்லா வித்தை பாழ்| என்பது முதுமொழி.
சற்குரு ஸ்ரீசரவணபாபா சுவாமி முருகனின் அவதாரமெடுத்ததுடன் மக்கள் மீது நிபந்தனையற்ற அன்பும் கொண்டவர். சேவையின் மகத்துவத்தை அவரது சற்சங்கங்களில் வலியுறுத்தி வருகிறார். சற்சங்கங்களில் சுவாமி இந்து மதத்தின் அறக்கருத்துக்களை தமிழில் மிக எளிமையான முறையில் எமக்கு உணர்த்தி வருகிறார். பதிவு செய்யப்பட்டவை எக்காலத்துக்கும் நிரந்தரமானவை. சுவாமியை தரிசிப்பதுடன் அவரது சற்சங்கத்தை உற்றுக் கேட்டலும் சேவைகளில் தலையானவை, இதையே பக்தி சாதனை என்பார்கள். சுவாமி மேற்கொள்ளும் பஜனைகளும், ஆராதனைகளும் மிகவும் புனிதமானவை. இவை உள்ளத்தை உருகவைக்கும் அனுபவங்களாக இருக்கும். சுவாமி எந்நேரமும் மந்திரங்களையும் சுலோகங்களையும் உச்சரித்தபடியே இருப்பார். தன்னை வருத்தி, தன்னை நம்பியவர்களை அரவணைத்துக் காத்து வருகிறார் எங்கள் சுவாமி. சுவாமியை நம்பியவர்கள் தங்களது அனுபவங்களைத் தெரியப்படுத்துகையில் சுவாமி தம்முடன் துணை நின்றதால் மலைபோல் வந்த கஸ்டம் பனிபோல் மறைந்தது என்று சுவாமியிடம் சரணடைகின்றனர்.
சேவைகளில் ஒன்று தானம் செய்தல். சுவாமியின் வழிகாட்டலில் உலகளாவிய தர்மகாரியங்கள் நடைபெறுகின்றன. சுவாமி ரூடவ்ழமண்ணுக்கு பல தடவைகள் விஜயம் செய்துள்ளார். கதிர்காம கந்தன் ஆலயத்தில் திரையின் பின்னால் மறைத்து வைக்கப்பட்டிருந்த கந்தனின் விக்கிரகம் சுவாமியிடம் கையளிக்கப்பட்டது. இது சேவைக்குக் கிடைத்த வரப்பிரசாதமாகும். வன்னியிலுள்ள சிறிய கிராமங்களுக்கும் போய் உடல் ஊனமுற்றவர்களையும், போரால் நலிவடைந்த மக்களையும் கண்டு ஆசியும் வழங்கி பொருளுதவியும் செய்துள்ளார். ரூடவ்ழ மக்களின் கண்ணீரைத் துடைக்க தன்னை வருத்தியுள்ளார். சுவாமி எம்மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதில் சிகரம் வைத்தாற் போல அமைந்தது முல்லைதீவு கடற்கரையில் சுவாமி ஆற்றிய ஆத்மசாந்திப் பிரார்த்தனை. திருக்கேதீஸ்வரம், சிவனிடம் அனுமதி பெற்று முள்ளியவளையில் தானங்கள் செய்து முல்லைக் கடற்கரையில் ஏக்கங்களுடனும், தவிப்புடனும் போரில் உயிர் நீத்த அத்தனை மக்களுக்கும் சாந்தி கிட்ட வேண்டுமென்று சுவாமி செய்த பிரார்த்தனையாகும். வற்றாப்பளை அம்மனிடம் மறுபிறப்பு கிட்ட வேண்டுதலும்
செய்யப்பட்டது. இதன் மூலம் சுவாமி எங்கள் இதயங்களில் பதிவாகி விட்டார்.
கனடாவில் சற்குரு சரவணபாபாவின் வழிநடத்தலில் பல ஆண்டுகளாக ஒரு அமையம் இயங்கி வருகின்றது. இங்கு இரத்ததானம், உணவு வங்கிக்கு பொருள் சேகரித்தல், மரநடுகை, முதியோர் இல்லங்களில் பிரார்த்தனை நடத்துதல், நற்பணிக்கான வீதியோட்டத்தில் பங்கு பற்றுதல் போன்றவை நிகழ்த்தப்படுகின்றன. இவற்றுடன் மாதம் இருமுறை கூட்டுப் பிரார்த்தனைகளிலும் ரூடவ்டுபட்டு சுவாமியின் போதனைகளைப் பலரும் அறியும்படி செய்வதுடன் வழிபாடுகளும் நடத்தப்படுகின்றன.
மக்கள் தம் உள்ளத்தை உணர்த்துவதற்காகவும் ஞான ஒளியை காண்பதற்காகவும் ஞான பிரசாதம் பெறுவதற்காகவும் கனடாவில் ஞானஜோதி பீடம் என்ற தர்மநிலையம் அமையவிருக்கின்றது. இது ஒரு பாடசாலையாகவும். தேவசாலையாகவும், தர்மசாலையாகவும் அமையும் என்பது சுவாமியின் தீர்க்கதரிசனம். அடியவர்களுக்கு கர்ம வினைகளில் இருந்து விமோசனம் கிடைக்க ஞானஜோதி பீடம் துணை நிற்கும். குருவருள் மூலம் திருவருள் கைகூடி அனைவரது வாழ்விலும் சுகமும் சந்தோசமும் கைகூட வேண்டுமென்ற பிரார்த்தனையுடன் எமது சற்குருவை வரவேற்க நாம் எல்லோரும் ஒன்று கூடி தயாராகுவோம்.
சுவாமியை தரிசித்து ஆராதனைகளில் பங்குபற்றி சற்சங்கத்தை உற்றுக் கேட்டு சுவாமியின் கையால் பிரசாதத்தைப் பெற்று பேரானந்தம் பெற அனைவரையும் வரவேற்கிறது கனடா சரவணபவா சேவா அமையம், சுவாமியின் நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும்.
ஓம் சரவணபவ.