2022-06-29 திகதி மாலை 4.45 மணி அளவில் வடக்கு மாகாணக் கல்வித்திணைக்களத்தில் மாகாணக்கல்விப் பணிப்பாளர் செ. உதயகுமார் அவர்களைச் சந்தித்து, யாமும் (புயல்நேஷன்) இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின தென்மராட்சிக் கல்வி வலய செயலாளர் கி. சிவாநந்தன் அவர்களும் இன்றைய வடக்கு மாகாணக் கல்வி நிலைத் தொடர்பான விடயங்களைக் கலந்துரையாடினோம்.
வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த அதிபர்கள், ஆசிரியர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் முதலியோரின் வேண்டுகோள்களுக்கு ஏற்ப, இவ் சந்திப்பை மேற்கொண்டோம். அவ் வேளை ஆரோக்கியமான விடங்கள் கலந்துரையாடப்பட்டன. எரிபொருள், மூன்று நாட்கள் பாடசாலை நடத்துதல், யாழ் வலய உள்ளக இடமாற்றம், மாகாண இடமாற்றம், பாடசாலை செல்லும் நேரம், விசேட விடுமுறைகள் முதலிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
போதிய அளவு எரிபொருள் கிடைக்கும் வரை ஆசிரியர்கள், மாணவர்களின் கல்வி நலன் கருதி செயற்படும் வண்ணம் கேட்டுக்கொண்டார். ஆசிரியர்கள் தவிர்க்க முடியாத காரணங்களினால், பாடசாலைக்குச் சமுகமளிக்க முடியாவிடின், அவர்களுக்கு விசேட விடுமுறை ஆதாரங்களுடன் வழங்கப்படும் என்றும் பாடசாலையை நடத்தி செல்லுதல் வலயக் கல்விப் பணிப்பாளர்களினதும் அதிபர்களினதும் விருப்பத்திற்கு விடப்பட்டுள்ளது என்றும் யாழ்ப்பாணக் கல்வி வலய பணிப்பாளர் தலைமையில் யாழ்ப்பாணக் கல்வி வலயத்தில் உள்ளக இடாற்றம் நோத்;தியாக நடைபெற்றுள்ளதாகவும் வெளிமாவட்ட சேவை ஆறு வருடங்களாக்கப்பட்டன (இது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் புயல்நேஷன் தலைமையில் நடநத்திய பல்வேறு போராட்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகும். போராட்டங்களுக்கு ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன். தேவை கருதி எமது மகஜர் இணைக்கப்படுகின்றது.) எனவும் பணிப்பாளர் அவர்கள் குறிப்பிட்டார்.
இடமாற்ற சபை கூடி வெளிமாவட்ட சேவை ஆறு வருடங்ளாக்கப்பட்டமையால், மேன்முறையீடுகளுக்கு (2021ஃ2022) இரண்டு தடவைகள் விண்ணப்பங்கள் கோரப்படட்ன. நிகழ்நிலையில் 2023 ஆண்டுக்கான வருடாந்த இடமாற்றத்திற்குத் தகுதியானவர்கள் விண்ணப்பிப்பது நன்று. அதற்கு விண்ணப்பிக்கும் இறுதி திகதி 08-07-2022 ஆக நீடிக்கப்பட்டுள்ளது. முதலிய விடயங்களையும் குறிப்பிட்டார்.
யாழ் வலயத்தில் நேர்தியாக உள்ளக இடமாற்றம் இடம்பெற மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஒத்துழைப்பு நல்கியமைக்கு எமது சங்கம் சார்பாக, அவருக்கு பாராட்டுக்களைத் தெரிவித்தேன்.
இங்ஙனம்,
தங்கள் தொண்டில்,
புயல்நேஷன்
077 – 9681333
கௌரவ ஆளுநர்,
யாழ்ப்பாணம்,
வடக்கு மாகாணம்.
18.01.2021.
அனைத்து ஆசிரியர்களுக்கும் இட மாற்றத்தில் சம வாய்ப்பு வழங்கப்படாமை
வடக்கு மாகாணத்தில் 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரிய இட மாற்றத்தில், ஆசிரியர்கள் தமது சேவை காலத்தில் அதிகஷ்ட, கஷ்ட பிரதேசங்களில் ஆறு வருடங்களுக்கு மேல் வெளி மாவட்டங்களில் சேவை ஆற்றிய போதும் எந்த விதமான காரணங்களும் குறிப்பிடப்படாமல் அவர்களின் இவ்வருடத்திற்கான இட மாற்றம் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆசிரியர்களுக்கு முதல் நியமனக் கடிதத்தில் சிலருக்கு ஐந்து வருடங்கள் சேவையாற்ற வேண்டும் எனவும் வேறு சிலருக்கு ஐந்து வருடங்கள் மாத்திரம் சேவையாற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்ட போதும், ஒரு வருடம், இரண்டு வருடங்கள், மூன்று வருடங்கள் மேலதிகமாக சேவை ஆற்றிய ஆசிரியர்கள் பலர் உள்ளனர்.
ஒரு பிரதேசத்தில் அல்லது கல்லூரியில் தொடர்ச்சியாக சேவையாற்றுவதன் மூலம் ஏற்படக்கூடிய ஒரு தலைப்பட்ச நிலைமை ஆசிரிய தொழில் விருத்திக்குப் பாதிப்புக்களை ஏற்படுத்துவதனால், பல்வேறுபட்ட பிரதேசங்கள் பல்வேறுபட்ட சமூக பொருளாதார மற்றும் கலாசார சூூழல்களில் உள்ள கல்லூரிகளின் சேவைக்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் பல்வேறுபட்ட அநுபவங்களைப் பெற்றுக்கொண்டு தமது செயற்றிறனை விருத்தி செய்வதற்கும் சகல ஆசிரியர்களுக்கும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என தேசிய ஆசிரியர் இட மாற்றக் கொள்கை – சுற்றறிக்கை 2007ஃ20 – 1.6 இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கு அமைய இங்கு இட மாற்றங்கள் இடம் பெறுவதில்லை; ஆசிரியர்களுக்கிடையே பாராபட்சம் காட்டப்படுகின்றது. அனைத்து ஆசிரியர்களுக்கு இட மாற்றத்தின் போது, காலப் பகுப்பில் சம உரிமை – வாய்ப்பு – வழங்கப்படாமையால், இன்று கல்விச் சமூகம் பெரும் சிக்கலை எதிர் கொண்டுள்ளது; எதிர் காலத்தில் இன்னும் பாரிய சிக்கல்களை எதிர் கொள்ள வேண்டி வரும் என்பதையும் இவ்விடத்தில் சுட்டிக்காட்டுகின்றோம்.
வெளி மாவட்டங்களில் சேவையாற்றும் ஆசிரியர்கள் பொருளாதார ரீதியாகவும் குடும்ப ரீதியாகவும் உடல் ரீதியாகவும் உள ரீதியாகவும் பல பின்னடைவுகளைச் சந்தித்துள்ளமையால், திருப்திகரமான கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாமல் வாழ்க்கையில் விரக்தி நிலையை அடைந்துள்ளனர். இதனால், வடக்கு மாகாணம் தேசிய ரீதியான கல்விக்கான பங்களிப்பில் பின்னடைவைக் கண்டுள்ளது.
2020.10.30 திகதி அன்று வடக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் மாகாணக் கல்விப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற ஆசிரிய இட மாற்ற சபையில்:- முதல் நியமனக் கடிதத்தில் ஐந்து வருடங்கள் எனக் குறிப்பிடப்பட்டவர்கள் ஆறு வருடங்கள் வெளி மாவட்ட சேவையைப் பூர்த்தி செய்தால், போதும் எனவும் சொந்த மாவட்டத்தில் உள்ள வலயங்களில் வெற்றிடங்கள் இல்லாவிடின் அருகில் உள்ள வலயங்களுக்கு நியமிக்கப்படுவார்கள் எனவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், அவை பின்னர் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஆசிரியர் நலனில் அக்கறை கொண்ட தொழிற்சங்கம் என்ற ரீதியில் நாம் இவ்வாறான செயற்பாடுகளை எதிர்க்கின்றோம். தேசிய ஆசிரியர் இட மாற்ற கொள்கையைத் தழுவி இட மாற்றத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
எமது நாட்டடின் கல்வி வளர்ச்சியில் கரிசனை கொண்ட தொழிற் சங்கம் என்ற வகையில், ஆறு வருடங்களுக்கு மேல் வெளி மாவட்ட சேவையை நிறைவு செய்து, பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு சாதகமான தீர்வைப் பெற்றுத் தருமாறு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் அவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம்.
இங்ஙனம், ……………….
பொதுச் செயலாளர்,
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,
இங்ஙனம், ……………….
(பெ.ஸ்ரீகந்தநேசன்), செயலாளர்,
வடக்குமாகாணம்,
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்,