(30-06-2022)
வட அமெரிக்க தமிழ்ச் சங்க பேரவை 35 வது ஆண்டாக நடாத்தும் ‘மாபெரும் பேரவை தமிழ் விழாவில்’ பங்கேற்பதற்காக வட அமெரிக்க தமிழ்ச் சங்கத்தின் அழைப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இன்று வியாழக்கிழமை (30) அமெரிக்கா பயணமானார்.
நாளை 1ஆம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை நியூயோர்க்கில் இந்நிகழ்வு நடை பெறவுள்ளது.
இந்த பயணத்தில் அமெரிக்க அரசின் இராஜாங்க திணைக்களங்களின் உயர் அதிகாரிகளுடனும் ‘தமிழர் தரப்பு நிலைப்பாடு’ தொடர்பாக கலந்துரையாட சந்திப்புக்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு அமெரிக்க வாழ் தமிழ் அமைப்புகள் பலரோடும் சந்திப்புக்களை மேற்கொள்ளவுள்ளார்.
நேற்று முன் தினம் தினம் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் குறித்த நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.