(மன்னார் நிருபர்)
(30-06-2022)
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை வவுனியா மாவட்டத்தில் இருந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் இன்று வியாழக்கிழமை (30) காலை அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.
இலங்கை தமிழர்களை மீட்ட மரைன் போலீசார் ராமேஸ்வரம் மரைன் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணைக்கு பின்னர் 4 பேரையும் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்படுவார்கள்.
-வவுனியாவில் இருந்து மன்னாரிற்கு வந்து மன்னாரில் இருந்தே படகு மூலம் தனுஷ்கோடியை வந்தடைந்ததாக அவர்கள் தெரிவித்தனர்.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,தமது உறவுகள் இந்தியாவில் வசித்து வருகின்ற மையினால் அவர்களுடன் அவர்களுடன் சேர்ந்து வாழ்வதற்காக தாம் படகு மூலம் வந்ததாக அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
தற்போது வரை இலங்கை தமிழர்கள் 96 பேர் அகதிகளாக தமிழகம் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.