உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்குவதில்லை !
கள்ளமில்லா சிரிப்பு கனிவான அணைப்பு
உள்ளம் எல்லாம் நிறைந்து
உதவிடும் தொண்டன்
வெள்ளமெனப் பாய்கின்ற
தருமத்தின் புதல்வன்
தெள்ளமுதாம் சைவத்தினை
சைவநீதியாய் செப்பிய தமிழன்
கடந்த மூன்று தசாப்தங்களாக கனடாவில்
“கனடா இந்துமாமன்றம்” என்ற அமைப்பின்
செயலாளராக பணியாற்றி தொண்டு செய்து
வந்த பன்னாளுமையும், பேராண்மையும்
நிறைந்த செயல் வீரன்
வேலுப்பிள்ளை நந்தீஸ்வரர்
எம்மை விட்டு பிரிந்தார் என்பதனை
ஆழ்ந்த கவலையுடனும் கண்ணீருடனும்
பகிர்ந்து கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம சாந்திக்காக
இறைவனை இறைஞ்சுகின்றோம்
மாமன்றம்
Canada Hindu Maamantram