கனடாவின் ரொறன்ரோ மாநகரில் நகர சபையின் பல திணைக்களங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய சீக்கிய இனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் தங்கள் தாடியை முழுமையாக சவரம் செய்த சம்மதிக்காத காரணத்தால் தங்கள்பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வேலையை இழந்தனர் என அறிவிக்கப்பபட்டுள்ளது.
இந்த துர்ப்பாக்கிய சம்பவம் பற்றி அறியப்படுவதாவது:
கோவிட்-19 தொற்று மீண்டும் பரவல் ஏற்பட்டால், மகத்தில் இறுக்கமான பொருத்தப்பட வேண்டிய N95 ரக முகக் கவசத்தை அணிய, வேண்டும் என ரொறன்ரோ நகரசபை நிர்வாகம் அறிவித்தது. எனவே. நகர சபையின் உத்தியோகத்தவர்கள் தங்குமிடமிடங்கள் மற்றும் ஓய்வு தளங்களில் பணிபுரியும் பாதுகாப்புக் உத்தியோகத்தர்கள் தங்கள் தாடிப்பகுதியை முழுமையாக சவரம் செய்ய வேண்டும் என்று ரொறன்ரோ நகர சபை நிர்வாகம் கட்டளை பிறப்பித்தது.
எனினும், நகர சபையின் இந்த கட்டுப்பாடுகளுக்கு அதிகளவிலான சீக்கிய இனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு அதிகாரிகள் மறுப்புத் தெரிவித்தனர்.
இவ்வாறான பாதுகாப்பு அதிகாரிகளில் ஒருவரான பிர்கவால் சிங் ஆனந்திடம், தாடியை முழுமையாக சவரம் செய்யும்படி கேட்டபோது. , சீக்கியரல்லாத ஒருவரை “தங்கள் தோலை உரிக்க வேண்டும்” என்று கேட்பதற்கு சமமானது இந்த கட்டளை என்று பதிலளித்தாராம். இதனால் முதலில் பிர்கவால் சிங் ஆனந்த் பதவியிலிருந்து நீக்கப்பட்டாராம்.
எனவே, கடந்த மாதம் தனது தாடியை வைத்திருப்பதா அல்லது ரொறன்ரோ நகர சபையின் ஓய்வு தளத்தில் பணிபுரியும் வேலையை வைத்திருப்பதா என்ற கேள்வி சீக்கிய இனத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானபாதுகாப்பு அதிகாரீகள் மத்தியில் தோன்றி நின்றன.
இவ்வாறு இரண்டு அழுத்தங்களுக்கு இடையே தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் சீக்கிய பாதுகாப்பு அதிகாரிிகள் இருந்தபோது, தாடியை முழுமையாக சவரம் செய்வது சாத்தியமில்லை என அறிவிக்கப்பட்டதாம்.
மற்றுமொரு பாதுகாப்பு உத்தியோகத்தரான ஜக்மீட் ஜெயம்வால் தனது பதிலைத் தெரிவித்தபோது, “நான் அவர்களிடம் சொன்னேன், நான் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்தவன், முழுமையான சவரம் செய்வது எனக்கு விருப்பமில்லை” என்று கூறினாராம்.
இந்த விடயம் தொடர்பாக ரொறன்ரோவின் செய்தித் தொடர்பாளரான எரின் விட்டன், நகரத் தளங்களில் வேலை இழந்த பாதுகாப்பு உ ததியோகத்தர்கள் நிரந்தர பணியாளர்கள் அல்ல. அவர்கள் ஒப்பந்தக்காரர்கள், மூலம் பணிகளுக்கு அமர்த்தப்பட்டனர் என்றும் நகர சபையின் சொந்த பாதுகாப்பு ஊழியர்கள் அல்ல என்றும் தெரிிவித்தார் என்பது இங்கு கவனிக்கத்தக்கது.