10வது ஆண்டு பூர்த்தி விழாவை பெற்றோர். மாணவர்கள் ஆகியோரோடு இணைந்து கொண்டாடிய ஸ்காபுறோ- நாதவீணா மன்றம்’
கனடா- ஸ்காபுறோ நகரில் ஆசிரியை ஶ்ரீமதி குகனேஸ்வரி சத்தியமூர்த்தி தலைமையில் வெற்றிகரமாக இயங்கிவரும் நாதவீணா மன்றம்’ தனது 10வது ஆண்டு பூர்த்தி விழாவை பெற்றோர். மாணவர்கள் மற்றும் நலன் விரும்பிகள் ஆகியோரோடு கடந்த கனடா தினத்தன்று – யூலை 1ம் திகதி- இணைந்து சிறப்பாக கொண்டாடியது.
இந்த விழா ஸ்காபுறோவில் அமைந்துள்ள ‘இசைக் கலா மன்றத்தின் மண்டபத்தில் நடைபெற்றது.
சிரியை ஶ்ரீமதி குகனேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம விருந்தினராக கனடா உதயன் ஆசிரியர் நாகமணி லோகேந்திரலிங்கம் மற்றும் சிறப்பு விருந்தினராக ஒன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி டொலி பேகம் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரைகளை ஆற்றியும் மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களை வழங்கியும் கௌரவித்தனர்.
‘ரைம் எப் எம் வானொலி அறிவிப்பாளரும் நிகழ்ச்சித் தயாரிப்பாளருமான இளங்கோ நிகழ்ச்சிகளை இனிதாக தொகுத்து வழங்கினார்.
வழமைபோல கடந்த கால ஆண்டு கால விழாக்களைப் போல அன்றை பத்தாவது ஆண்டு விழாவில் மேடையில் தோன்றிய அனைத்து மாணவர்களும் நேர்த்தியாகவும் இனிமையாகவும் தங்கள் இசைச் சமர்ப்பணங்களைச் ஆற்றினர்.
மிருதங்க வித்துவான் இராஜலிங்கம் வாசுதேவன் அவர்களின் மாணவர்கள் பக்கவாத்தியங்களான மிருதங்கம், தபேலா மற்றும் கடம் ஆகியவற்றை இசைத்தனர்.
அங்கு உரையாற்றிய ன்றாரியோ மாகாணப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி டொலி பேகம் தனது உரையில் கனடாவில் ஈழத் தமி;ழர்கள் தங்களை ஆற்றல் அறிவு ஆகியவற்றைக் கொண்டு நாட்டுக்கு சிறந்த சேவையாற்றி வருகின்றார்கள் என்றும் அந்தவகையில் தங்கள் பாரம்பரிய கலைகளைப் பேணுவதன் மூலம் இநத நாட்டுக்கும் ஏனைய இனத்தவர்களுக்;கும். தங்கள் சமூகத்தில் உள்ள இளையவர்களுக்கும் மன நிறைவை தருகின்◌ாறர்கள் என்றும்.இன்றைய விழா நாயகி ஆசிரியை ஶ்ரீமதி குகனேஸ்வரி சத்தியமூர்த்தி அவர்களும் சமூகத்திற்கும் இசைக்கும் பங்களிப்பு செய்து வருகின்றார் என்றும் தெரிவித்ததார்.
அங்கு உரையாற்றிய பிரதம விருந்தினர் நாகமணி லோகெந்திரலிங்கம் அவர்கள் இங்கு இயங்கிவரும் நுண்கலைக் கூடங்களில் சிரியை ஶ்ரீமதி குகனேஸ்வரி சத்தியமூர்த்தி தலைமையில் வெற்றிகரமாக இயங்கிவரும் நாதவீணா மன்றம்’ தனது இசைப் பணியை சிறப்பாகச் செய்து வருவதாகவும், அத்துடன் ஆசிரியை அவர்கள் குருவாக மற்றுமன்றி மாணவர்களுக்கு ‘கலைத் தாயாகவும்’ இருந்து அவர்களை வழி; நடத்துகின்றார் என்று தெரிவித்தார்.
(படங்கள்;_ சத்தியன் மற்றும் செல்வி சுருதி சுரேசன்)