– ரணில் பாராளுமன்றத்தில் அறிவிப்பு
தமக்கு ஆட்சி வழங்கப்படும் பட்சத்தில், 6 மாத காலத்தில் நாட்டை வழமைக்கு கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளதாக பாராளுமன்றத்தில் பிரதமர் ரணில் தெரிவித்துள்ளார்.
.நாட்டை கட்டியெழுப்பும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்கவின் திட்டம் நாட்டின் பிரச்சனைகளை தீர்க்குமாக இருந்தால், பிரதமர் பதவியிலிருந்து விலக தான் தயார் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவ்வாறான திட்டங்கள் இருந்தால், அதனை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறும், ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்க விருப்பம் இல்லையென்றால், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
அநுர குமார திஸாநாயக்கவினால் வழங்கப்படும் திட்டம் சாதகமாக இருக்கும் பட்சத்தில், தாம் பிரதமர் பதவியை துறப்பதற்கு தயார் என பிரதமர் சபையில் அறிவித்தார்.
தான் மாத்திரமன்றி, அமைச்சர்களும் பதவி விலக தயார் என அவர் கூறியிருந்தார்.
இந்த நிலையில், பாராளுமன்றத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்கட்சி உறுப்பினர்கள் கோஷங்களை எழுப்பியிருந்தது. இங்கு குறிப்பிடத்தக்கது