(07-07-2022)
மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பெண் பொலிஸ் உத்தியோகத்தர் மீது பாலியல் தொல்லை கொடுத்த பொலிஸ் உத்தியோகத்தரான பொலிஸ் சாரதியை எதிர்வரும் 20 ம் திகதி வரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் இன்று (07) உத்தரவிட்டார்.
குறித்த பொலிஸ் நிலையத்தில் பெண்கள் பிரிவில் பெண் பொலிஸ் உத்தியோகத்தராக கடமைற்றிவரும் பெண் பொலிஸ் உத்தியோத்தர் மீது சம்பவதினமான நேற்று புதன்கிழமை பிற்பகல் அங்கு சாரதியாக கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் பொலிஸ் நிலையத்தில் வைத்து கையைப்பிடித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றஞ்சாட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் முறையிட்டுள்ளார்.
இது தொடர்பாக சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகரின் கவனத்துக்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கொண்டு வந்ததையடுத்து உடனடியாக குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை பணியில் இருந்து இடைநிறுத்தியதுடன் அவரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு சிரேஸ் பொலிஸ் அத்தியட்சகர் ஆலோசனை வழங்கியதையடுத்து குறித்த பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்தனர்
இதில் கைது செய்யப்பட்டவர் அம்பாறையைச் சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் பொலிஸ் சாரதியாக கடமையாற்றி வருகின்றார் எனவும் இவரை இன்று (07) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் பீற்றர் போல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை எதிர்வரும் 20ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.